முகம் எப்படி இவ்ளோ பொலிவாக இருக்கு… ஹர்லீன் தியோல் கேள்வி… மோடியின் ரியாக்சனை பாருங்க!

PM Modi With Indian Women National Cricket Team: ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை (ICC Women’s World Cup 2025) இந்திய அணி முதல்முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்தது. ஐசிசி மகளிர் உலகக் கோப்பையின் 52 ஆண்டு கால வரலாற்றில் இந்தியா இதற்கு முன் இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருக்கிறது. 2005 மற்றும் 2017 ஆகிய இரண்டு முறை மிதாலி ராஜ் தலைமையில் இந்தியா இறுதிப்போட்டுக்கு வந்தாலும் கோப்பையை நெருங்க முடியவில்லை.

Add Zee News as a Preferred Source

PM Modi: இந்திய மகளிர் அணிக்கு பாராட்டு மழை

தற்போது ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் பிளேயர் ஆப் தி மேட்ச் விருதை இந்திய ஓபனிங் பேட்டர் ஷபாலி வர்மா வென்றார், பிளே ஆப் தி டோர்னமெண்ட் விருதை இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா வென்றார். தொடர்ந்து, சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.37.5 கோடியை ஐசிசி வென்றது. மேலும், இந்திய மகளிர் அணிக்கு ரூ. 51 கோடியை பரிசுத்தொகையாக பிசிசிஐ வழங்கியது.

PM Modi: பிரதமர் மோடியுடன் வீராங்கனைகள் சந்திப்பு

இந்திய மகளிர் அணியின் இந்த வெற்றி, நாட்டில் மகளிர் கிரிக்கெட் மீதான மதிப்பை மேலும் உயர்த்தும் என்றும் பெண்கள் கிரிக்கெட் நோக்கி நகர்வது அதிகமாகும் என்றும் நம்பப்படுகிறது. ஆடவர் மற்றும் மகளிர் அணி இரண்டையும் சேர்ந்து இந்தியா வெல்லும் 7வது ஐசிசி கோப்பை இதுதான். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றியை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி உலகக் கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளை நேற்றிரவு சந்தித்து பேசினார். அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வீராங்கனைகளுடன், இந்திய மகளிர் அணி தலைமை பயிற்சியாளர் அமோல் மசும்தாரும் இருந்தார்.

PM Modi: பிரதமரின் சரும பராமரிப்பு

பிரதமரும், வீராங்கனைகளும் கலந்துரையாடினார். பலரும் அவரிடம் பொது விஷயங்கள், கிரிக்கெட் குறித்து பேசி வந்தபோது, வீராங்கனை ஹர்லீன் தியோல் பிரதமர் மோடியின் சரும பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பிரதமர் உள்பட அறையில் இருந்த அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர். 

When women’s cricket gunn fielder Harleen Deol @imharleenDeol asked PM Modi about his skincare routine 

PM smiled and said “It’s been 25 years as head of government… it’s the blessings of the people that keep me glowing.”pic.twitter.com/mklQKCwrqq

 (@TheRobustRascal) November 6, 2025

ஹர்லீன் தியோல் பிரதமர் மோடியிடம், “ஐயா, உங்களின் சருமம் ஜொலிக்கிறது. தங்களின் அன்றாட சரும பராமரிப்பு குறித்து பகிர்ந்துகொள்ள இயலுமா?” என கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி சிரித்துக்கொண்டே, “அதுகுறித்தெல்லாம் நான் யோசித்ததே இல்லை” என்றார்.

PM Modi: சினே ராணா சொன்ன விஷயம்…

தொடர்ந்து, இந்திய மூத்த வீராங்கனை சினே ராணா பிரதமரிடம், “ஐயா, நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் அன்புதான் அது” என்றும் கூற, பிரதமர் மோடியின் முகம் புன்சிரிப்பால் மலர்ந்தது. தொடர்ந்து, இந்த பேச்சுகளுக்கு இடையே தலைமை பயிற்சியாளர் மசும்தார் பிரதமரிடம், “இப்போது புரிகிறதா சார், இவர்களையெல்லாம் வைத்துதான் நான் சமாளிக்க வேண்டும். இதனாலேயே எனக்கு வெள்ளை முடி வந்துவிட்டது” என்றார் நகைச்சுவையாக… இவை அரங்கத்தையே சிரிப்பொலியால் நிறைத்தது.

PM Modi: பயிற்சியாளர் பகிர்ந்த நினைவு

மேலும் அமோல் மசும்தார் தனது நினைவு ஒன்றையும் பிரதமர் மோடியுடன் பகிர்ந்துகொண்டார். இங்கிலாந்துக்கு இந்திய மகளிர் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இங்கிலாந்து அரசரை சந்தித்து புகைப்படமெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர்களின் நடைமுறையின்படி அரசர் சார்லஸ் உடன் புகைப்படம் எடுக்க 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால், வீராங்கனைகள் மட்டுமே புகைப்படம் எடுத்துக்கொள்ள முடிந்தது. பயிற்சியாளர் குழுவில் யாராலும் அவருடன் புகைப்படம் எடுக்க முடியவில்லை.

ஆனால், பயிற்சியாளர் குழுவினருக்கு அரசர் சார்லஸ் உடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியாதது பெரிய ஏமாற்றத்தை தரவில்லை என்றும் அதற்கு பதிலாக ஓடிஐ உலகக் கோப்பையை வென்று பிரதமர் மோடியுடன் புகைப்படத்தை எடுக்கலாம் என்று அப்போதே விரும்பியதாகவும் அமோல் மசும்தார் கூறியது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | இந்திய மகளிர் அணியில் அதிக சொத்து மதிப்பு வைத்துள்ளது யார் தெரியுமா?

மேலும் படிக்க | உலக கோப்பையை வென்ற மகளிர் அணி: கண் கலங்கி அழுத ரோகித் சர்மா.. வைரல் வீடியோ!

மேலும் படிக்க | உலகக் கோப்பை வென்றவுடன் அதிரடி முடிவு.. ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன் பதவியிலிருந்து விலகல்?

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.