RCB sale : ஐபிஎல் தொடரில் மிகவும் அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), பெரும் தொகைக்கு விற்பனையாகும் நிலையில் உள்ளது. அணியின் தற்போதைய உரிமையாளரான தியாஜியோ (Diageo) நிறுவனம், தங்களின் சொந்த தொழிலில் கவனம் செலுத்துவதற்கு ஏதுவதாக இந்த பெரிய முடிவை எடுத்துள்ளது. இதுதொடர்பான முக்கிய காரணங்கள், ஏலத்தில் குதிக்கப்போகும் முன்னணி நிறுவனங்கள், மற்றும் இது ஐபிஎல் 2026 மெகா ஏலத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து இங்கே காணலாம்.
Add Zee News as a Preferred Source
ஆர்சிபி விற்பனை: காரணம் என்ன?
தற்போது RCB அணியின் உரிமையை வைத்திருக்கும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) (தியாஜியோவின் துணை நிறுவனம்), இந்த அணி மீதான தனது முதலீட்டை “வியூக மறுஆய்வு” (Strategic Review) செய்ய முடிவு செய்துள்ளது. ஏனென்றால், தியாஜியோவின் முக்கியத் தொழில் ஆல்கஹால் பானங்கள் ஆகும். அவர்களுக்கு கிரிக்கெட் அணி என்பது “முக்கியமற்றது” (Non-Core). எனவே, தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தி, தங்களது முக்கியத் தொழிலில் மட்டும் கவனம் செலுத்த இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.அதனால், ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்பாக, அதாவது மார்ச் 31, 2026-க்குள் ஆர்சிபிஐ விற்பனை செய்ய முயற்சி எடுத்து வருகிறது.
ஆர்சிபி அணியின் இப்போதைய மதிப்பு
விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு, ரசிகர்களின் ஆதரவு ஆகியவற்றால், RCB அணியின் தற்போதைய மதிப்பு $2 பில்லியன் ஆகும். அதாவது, சுமார் ₹16,600 கோடி வரை இருக்கலாம் எனத் சந்தை மதிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், இந்தியாவில் உள்ள சில மிகப் பெரிய நிறுவனங்கள், சுமார் ₹16,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இந்த அணியை வாங்க ஆர்வமாக உள்ளன. இதில் முக்கியமானவை:
அதானி குழுமம் – ஐபிஎல் சந்தையில் நுழைய நீண்ட நாட்களாக முயற்சி செய்து வரும் முன்னணி இந்தியக் குழுமம். இவர்கள் மிகவும் தீவிரமாக உள்ளதாகத் தகவல்.
JSW குழுமம் – ஏற்கனவே டெல்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளர்களாக உள்ளனர். RCBயை வாங்கினால், டெல்லி அணியின் பங்கை விற்க வேண்டி வரலாம்.
ஆதர் பூனாவாலா – சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் (SII) தலைமை நிர்வாகி. இவரும் கடந்த காலங்களில் ஐபிஎல் அணியை வாங்க ஆர்வம் காட்டியவர்.
அமெரிக்க தனியார் முதலீட்டு நிறுவனங்கள் – சில சர்வதேச தனியார் முதலீட்டு நிறுவனங்களும் (Private Equity Firms) அதிக விலைக்கு ஏலம் எடுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
ஆர்சிபி அணிக்கு புதிய பெயர்
RCB அணியின் “ராயல் சேலஞ்சர்ஸ்” என்ற பெயர், தற்போதைய உரிமையாளரின் (USL/Diageo) மதுபான பிராண்டை அடிப்படையாகக் கொண்டது. புதிய உரிமையாளர் வரும்போது, அணியின் பெயரை தங்கள் நிறுவனத்துடன் இணைக்கும் விதமாக பெயரை மாற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இருப்பினும், ரசிகர்கள் ஆர்சிபி (RCB) என்ற பெயரைத் தக்கவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
விராட் கோலியின் ஐபிஎல் எதிர்காலம்
ஆர்சிபி அணியின் விற்பனையானால், அந்த அணியின் அடையாளம் மற்றும் மிகப் பெரிய பிராண்ட் மதிப்புக்கு காரணமாக இருக்கும் கிங் கோலியை புதிய உரிமையாளர் தக்க வைப்பாரா? அல்லது விடுவிப்பாரா? என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. இப்போதைய சூழலில் புதிய உரிமையாளர் யார் வந்தாலும், விராட் கோலியைத் தக்கவைத்துக் கொள்ளவே முயற்சி செய்வார்கள். ஏனெனில், அவரது ரசிகர் பலம்தான் இந்த அணிக்கு அதிகபட்ச வணிக மதிப்பைக் கொடுக்கிறது. எனவே, கோலி தொடர்ந்து RCB அணியில் நீடிப்பது என்பது, புதிய உரிமையாளரின் விளையாட்டுத் திட்டம் (Vision) மற்றும் 2026 ஏலத்தின் தக்கவைப்பு விதிகளைப் (Retention Rules) பொறுத்தும் இருக்கும். இருந்தபோதிலும், கோலியை விடுவிப்பது என்பது வணிக ரீதியாக ஒரு தவறான முடிவாக இருக்கும் என்பதால், அவர் ஆர்சிபி அணியுடன் நீடிக்கவே அதிக வாய்ப்புள்ளது.
About the Author
S.Karthikeyan