EICMA 2025ல் டிவிஎஸ் நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் 585cc பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் பெற்ற அட்லஸ் மற்றும் அட்லஸ் GT அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு 2026 ஆம் ஆண்டின் மத்தியில் கிடைக்க உள்ளது.
2020 ஆம் ஆண்டு டிவிஎஸ் இந்நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு தற்பொழுது மிகப்பெரிய அளவில் மாற்றங்களை சந்தித்துள்ள நார்டன் புதிய மானெக்ஸ் மற்றும் மானெக்ஸ் ஆர் பைக்கை காட்சிப்படுத்தியுள்ளது.
Norton Atlas and Atlas GT
585cc லிக்யூடு கூல்டு பெறுகின்ற அட்லஸ் அட்வென்ச்சரின் பவர் மற்றும் டார்க் விபரங்கள் தற்பொழுது வெளியிடப்படவில்லை. பல்வேறு எலக்ட்ரானிக் சார்ந்த ரைடிங் அம்சங்களை கொண்டுள்ள அட்லஸில் ஸ்டீல் டெர்லீஸ் சேஸிஸை பெற்று முன்பக்கத்தில் இரட்டை டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் சிங்கிள் டிஸ்க் கொண்டதாகவும் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் ஸ்போர்ட், டூரிங், அர்பன் மற்றும் ஆஃப்-ரோடு போன்ற ரைடிங் மோடுகளை பெற்றுள்ளது.
6-ஆக்சிஸ் IMU வசதியும், ரிமோட் ப்ரீலோட் அட்ஜஸ்டர், கீலெஸ் இக்னிஷன் மற்றும் பை டைரக்ஷனல் க்விக் ஷிஃப்டர் ஆகியவையும் உள்ளன, 8-இன்ச் TFT டிஸ்ப்ளே வழியாக பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்தவற்றை வழங்குகின்றது.
முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷஆக் அப்சார்பர் பெற்று அட்லஸ் மாடலில் கிராஸ் ஸ்போக்டூ வீலை பெற்று 19 அங்குல முன்புற டயர் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல டயர் உள்ளது.


அட்லஸ் ஜிடி மற்றும் வழக்கமான அட்லஸ் மாடலுக்கு உள்ள வேறுபாடு என்னவென்றால் அட்லஸ் ஜிடி பொதுவாக 17 அங்குல அலாய் வீல் பெற்று இருக்கை உயரம் 810 மிமீ ஆக உள்ள நிலையில் அட்லஸ் ஆனது 840 மிமீ ஆக உள்ளது.
இந்தியாவில் டிவிஎஸ் மோட்டார் மூலம் தயாரிக்கப்பட்டு பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட Atlas மற்றும் Atlas GT இரண்டும் நார்டன் நிறுவனத்தின் பாரம்பரிய ஸ்டைலைத் தக்க வைத்துக் கொண்டு, நவீன அம்சங்களை சேர்த்துள்ளன.




