கல்மேகி புயல் தாக்கி பிலிப்பைன்ஸில் 114 பேர் உயிரிழப்பு; 127 பேரை காணவில்லை

மணிலா: பிலிப்​பைன்ஸை தாக்​கிய கல்​மேகி புயலுக்கு 114 பேர் உயி​ரிழந்​ததை தொடர்ந்து அந்​நாட்​டில் அவசர நிலை பிரகடனம் செய்​யப்​பட்​டுள்​ளது.

பசிபிக் கடலில் உரு​வான கல்​மேகி புயல் நேற்று முன்​தினம் பிலிப்​பைன்ஸ் நாட்​டின் மத்​திய பிராந்​தி​யத்தை கடந்து தென்​ சீனக் கடல் நோக்கி நகர்ந்​தது. இதில் பிலிப்​பைன்​ஸின் மத்​திய பிராந்​தி​யத்​தில் உள்ள தீவு​களில் பலத்த சூறைக்​காற்று வீசி​யதுடன் கனமழை கொட்​டித் தீர்த்​தது. இதில் நீக்​ரோஸ் ஆக்​சிடென்​டல், செபு உள்​ளிட்ட மாகாணங்​கள் வெள்​ளக் காடாக மாறின. இ​தில் சாலைகளில் நிறுத்​தப்​பட்​டிருந்த கார்​கள், ஆற்​றங்​கரையோர வீடு​கள், பெரிய அளவி​லான கப்​பல் கன்​டெய்​னர்​களும் கூட வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டன.

பிலிப்​பைன்ஸ் இந்த ஆண்டு எதிர்​கொண்ட பேரிடர்​களில் மிக மோச​மான பேரிட​ராக இது கருதப்​படு​கிறது. இந்​நிலை​யில் பிலிப்​பைன்ஸ் மத்​திய பிராந்​தி​யத்​தில் கல்​மேகி புயலுக்கு 114 பேர் உயி​ரிழந்​தனர். இவர்​களில் பெரும்​பாலானோர் வெள்​ளத்​தில் மூழ்கி இறந்​தனர். 127 பேரை காண​வில்​லை.

அதி​காரி ஒரு​வர் கூறுகை​யில், “கல்​மேகி புய​லால் சுமார் 20 லட்​சம் பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். ஏற்​கெனவே நிவாரண முகாம்​களில் தங்க வைக்​கப்​பட்​டுள்ள 4,50,000 பேர் உட்பட 5,60,000 பேர் இடம் பெயர்ந்​துள்​ளனர்” என்​றார்.

இந்​நிலை​யில் பிலிப்​பைன்ஸ் அதிபர் பெர்​டி​னாண்ட் மார்​கோஸ் ஜூனியர் நேற்று அந்​நாட்​டில் அவசர நிலையை பிரகடனம் செய்​தார். அவசர நிதியை அரசு விரை​வாக வழங்​க​வும், உணவுப் பதுக்​கல், அதிக விலை நிர்​ண​யம் ஆகிய​வற்றை தடுக்​க​வும் இது உதவும் என கூறப்​படு​கிறது.

கல்​மேகி புயலுக்கு செபு மாகாணம் மிக​வும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. அங்கு மட்​டும் 71 பேர் உயி​ரிழந்த நிலை​யில் 69 பேர் காயம் அடைந்​தனர். மேலும் 65 பேரை காண​வில்​லை. கடந்த செப்​டம்​பர் 30-ம் தேதி ஏற்​பட்ட 6.9 ரிக்​டர் நிலநடுக்​க பாதிப்பில் இருந்து செபு இன்​னும் மீண்​டு​வ​ராத நிலை​யில் மற்​றொரு பேரிட​ரால் அப்​பகுதி மக்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இதற்​கிடை​யில் பசிபிக் கடலில் உரு​வாகி​யுள்ள மற்​றொரு புயல், கடும் புய​லாக வலுப்​பெற்று பிலிப்​பைன்​ஸின் வடக்கு மா​காணங்​களை அடுத்த வார தொடக்​கத்​தில் தாக்​கக்​கூடும் என வானிலை ஆய்​வு மையம் எச்சரித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.