சென்னை: தமிழ்நாட்டில் “முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது” என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சென்னையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையி தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ‘’கூட்டுறவு கீதம்’’ வெளியிடப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் 06.11.2025 அன்று தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தில், நடைபெற்ற ‘’கூட்டுறவு கீதம்’’ வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விவாழ்வில் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், முதல்முறையாக […]