பெட்டிக் கடைகளில் விநியோகிக்கப்படும் எஸ்ஐஆர் படிவங்கள்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை புகார் 

சென்னை: எஸ்​ஐஆர் படிவங்​களை வாக்​குச்​ சாவடி நிலை அலு​வலர்​கள் வீடு வீடாக வழங்​காமல் பெட்​டிக் கடைகளில் மொத்​த​மாக கொடுத்து விநி​யோகிப்​பதை தடுக்க வேண்​டும் என்று தலைமை தேர்​தல் அதி​காரி​யிடம் அதி​முக எம்​.பி. இன்​பதுரை புகார் மனு அளித்​துள்​ளார்.

இதுதொடர்பாக தலை​மைச் செல​கத்​தில் நேற்று தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி​யிடம் புகார் மனு ஒன்றை அவர் அளித்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வாக்​காளர் பட்​டியல் நேர்​மை​யாக இருந்​தால்​தான் தேர்​தலும் நேர்​மை​யாக நடக்​கும். அந்த வாக்​காளர் பட்​டியலில் இறந்து போனவர்​கள், இடம்​பெயர்ந்​தவர்​கள், மாயாவி​கள் இடம்​பெறக் கூடாது என்​ப​தற்​காகத்​தான் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப்​பணி மேற்​கொள்​ளப்​படு​கிறது. எஸ்​ஐஆர் நல்ல நோக்​கத்​துக்​காக கொண்டு வரப்​பட்​டது. எஸ்​ஐஆர்-ஐ திமுகஒரு பக்​கம் எதிர்த்​துக் கொண்​டு,மறுபுறம் அவர்​களே குளறு​படிகளில் ஈடு​படு​கின்​றனர்.

எஸ்​ஐஆர் படிவத்தை வாக்​காளர்​களுக்கு பிஎல்ஓ மூல​மாககொடுக்க வேண்​டும் என பலமுறை தேர்​தல் ஆணை​யத்​தில் வலி​யுறுத்​தி​விட்​டோம். ஆனால் திமுக வட்​டச் செய​லா​ளர்​கள், கவுன்​சிலர் ஆகியோரிடம் மொத்​த​மாக கொடுத்து விடு​கின்​றனர். மதுரை வடக்கு தொகு​தி​யில் பிஎல்ஓ ஒரு​வரிடம் மொத்​த​மாக கொடுத்​து, பெட்​டிக் கடைகள் மூல​மாக விநி​யோகம் செய்​துள்​ளனர். அவர்​களை கையும் களவு​மாக பிடித்து தேர்​தல் ஆணை​யத்​தில் ஒப்​படைத்துள்ளோம். இதன் பின்​னால் திமுக இருக்​கிறது.

அந்த படிவத்தை கொடுக்​கும் ​போது அந்த வீட்​டில் வாக்​காளர் இருக்க வேண்​டும் என்​பது விதி. திமுக​வினர் குடிபெயர்ந்​தவர்​களை தொடர்பு கொண்டு அங்​கேயே பதிவு செய்​கின்​றன. இது தேர்​தல் ஆணைய விதி​களுக்கு எதி​ரானது. மாவட்ட நிர்​வாகங்​கள் உள்​ளாட்சி அமைப்​பு​களு​டன் பேசி இறந்​தவர்​களின் பட்​டியலை வாங்கி அதை டிஎல்​ஓக்​களு​க்கு கொடுக்க வேண்​டும்.

சென்னை மாநக​ராட்​சியில்பிஎல்​ஓக்​களாக ஒப்​பந்த பணி​யாளர்​கள் நியமிக்கப்​பட்டுள்ளனர். திமுகவைச் சேர்ந்த பவானி பிஎல்ஓ-வாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இப்​படி இருந்​தால் எப்​படி நேர்​மை​யாக பணி நடை​பெறும். பிஎல்​ஓக்​கள் தமிழக அரசு அலுவலர்​கள் என்​ப​தால் ஆளுங்​கட்​சி கேட்க வேண்​டிய நிலை​​யில் உள்​ளனர். ஆசிரியர்​கள், வரு​வாய்த் துறை ஊழியர்​களை பயன்​படுத்த வேண்​டும்.இவர்கள் தவறு செய்​தால் நடவடிக்கை எடுக்க சட்​டத்​தில் வழி வகை உள்​ளது. ஆனால் ஒப்​பந்தபணி​யாளர்​கள் மீது நடவடிக்கை​ எடுக்க முடி​யாது. மேற்​கண்ட விவரங்​களை தேர்​தல் ஆணை​யத்​தில் அளித்​திருக்​கிறேன்​. இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.