ஹர்திக் பாண்டியா வேண்டாம்.. இந்திய அணிக்கு இனி இந்த CSK வீரர் போதும்!

Abhishek Nayar About Hardik pandya And Shivam Dube: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி 1 போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் உள்ளன. 2025 ஆசிய கோப்பையின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இத்தொடரில் இருந்து விலகி உள்ளார். அவரது இடத்தை இந்திய அணி சிவம் துபே-வை வைத்து நிரப்பி வருகிறது. 

Add Zee News as a Preferred Source

ஆல்-ரவுண்டரான சிவம் துபே நேற்று (நவம்பர் 06) நான்காவது டி20 போட்டியில், சிறப்பாக விளையாடினார். அவர் பேட்டிங்கில் 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்ததோடு, பந்து வீச்சில் ஆஸ்திரேலியா கேப்ட்சன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிம் டேவிட் ஆகியோரை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இப்போட்டியில் முதலில் இந்திய அணிதான் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 46, சிவம் துபே 22 ரன்களை எடுத்திருந்தனர். 

இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றிக்கு சிவம் துபே காரணம் என பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். அவர் நல்ல ஃபார்மி இருந்த மிட்செல் மார்ஷ் மற்றும் டிம் டேவிட்டை வீழ்த்தியதே இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்ததாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர். இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா இல்லாத குறையை சிவம் துபே தீர்த்து வைத்ததாக அபிஷேக் நாயர் கூறி உள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது, இந்திய அணி நிர்வாகம் எப்போதெல்லாம் சிவம் துபே-வுக்கு சவால் விடுகிறதோ, அப்போதெல்லாம் அவர் சிறப்பாக் விளையாடி உள்ளார். அவர் தி ஆல் ரவுண்டர் என்ற முத்திரை குத்தப்படாமல் இருந்தாலும், இந்திய ஆல் ரவுண்டர் செய்ய வேண்டிய அனைத்தையும் அவர் செய்துள்ளார். இந்தியாவுக்கு தேவையான ஆல் ரவுண்டர் என ஹர்திக் பாண்டியாவை நாம் எப்போதும் சொல்வோம். ஆனால் தன்னாலும் அந்த இடத்தில் இருக்க முடியும் என்பதை சிவம் துபே நிரூபித்து இருக்கிறார். அவர் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இல்லாத குறையை தீர்த்து இருக்கிறார் என அபிஷேக் நாயர் தெரிவித்தார்.   

முன்னதாக நான்காவது போட்டி முடிந்தவுடன் பேசிய சிவம் துபே, கம்பீர் மற்றும் மோர்னே மோர்கல் ஆகியோர் எனக்கு தெளிவான திட்டங்களை கொடுத்து, அதை செயல்படுத்த முழு சுகந்திரமும் அளித்தனர் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.