அடுத்த சிக்கலில் ஓலா எலக்ட்ரிக்., எல்ஜி எனர்ஜி பேட்டரி நுட்பத்தை பயன்படுத்தியதா.? | Automobile Tamilan

ஓலா எலக்ட்ரிக் தனது சொந்த தயாரிப்பு என குறிப்பிட்ட பாரத் செல் 4680 ஆனது தென்கொரியாவின் எல்ஜி எனர்ஜி சொல்யூஷன் (LG Energy Solution) நிறுவனத்தின் அதிக அடர்த்தி கொண்ட பவுச் வகை (high-density pouch-type cells) லித்தியம் ஐன் பேட்டரியை போலவே உள்ளதாக சிக்கல் எழுந்துள்ளது.

இந்த தொழில்நுட்பம் தென் கொரிய அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக “தேசிய மைய தொழில்நுட்பம்” (National Core Technology) என்று வரையறுக்கப்பட்டுள்ளது, அதாவது எந்தவொரு வெளிநாட்டு பரிமாற்றம் அல்லது வெளிப்படுத்தலும் தொழில்துறை தொழில்நுட்ப பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதாகும்.  இந்தச் சட்டம் தென் கொரியாவின் முக்கிய தொழில்நுட்பங்களான செமிகண்டக்டர், பேட்டரி, எலக்ட்ரிக் வாகன டெக் ஆகியவற்றை பாதுகாக்க வடிவமைக்கப்பட்டது. இதனை உண்மை என்று உறுதியானல் குற்றவியல் நடவடிக்கை எதிர்கொள்ள நேரிடலாம்.

LGES நிறுவனம் “நாங்கள் ஆரம்பத்திலேயே விசாரணை அமைப்புகளுடன் முழுமையாக ஒத்துழைத்து வருகிறோம்” என LGES நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.
“விசாரணை நடப்பதால் தற்போது மேலும் கருத்து சொல்ல முடியாது.”

எவ்வாறு ஓலாவுக்கு இந்த நுட்பம் கசிந்தது..,

தற்பொழுது பெயர் வெளியிடப்படாத ஒருவர் விசாரனை வளையத்தில் உள்ளதாகவும், அவரை Mr. A என குறிப்பிடப்படுகின்றது. விசாரணையின் போது Mr. A கூறியதாவது: “நான் சில தரவுகளை மாற்றியிருக்கிறேன், ஆனால் அவற்றில் ரகசிய தகவல்கள் இருந்தன என்று எனக்குத் தெரியாது.” என கூறியுள்ளார். அதற்கு LGES மறுத்து, அந்த தரவு “முக்கிய தொழில்நுட்பம் கொண்டது” என்று சுட்டிக்காட்டியுள்ளது.

ஓலா இதனை பன்படுத்தியிருக்க வாய்ப்புகள் உள்ளதா என்பது தெரியவில்லை, ஆனால் எல்ஜி நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி COO-வாக 2023 ஆம் ஆண்டு ஓலா நியமித்துள்ளது.

ஓலா எலகட்ரிக் இதுவரை குற்றச்சாட்டுக்கு அதிகாரபூர்வமான பதில் அளிக்கவில்லை. எல்ஜி விசாரணையில் முழுமையாக ஒத்துழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த விசாரணையின் முடிவு, எதிர்காலத்தில் இந்தியா–தென்கொரியா தொழில்நுட்ப ஒத்துழைப்பின் பாதையை தீர்மானிக்கக் கூடும்.

 source 

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.