கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது: தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு 

சென்னை: தமிழக ஆம்னி பேருந்​துகளுக்கு கேரளா போக்​கு​வரத்து துறை ரூ.70 லட்​சம் அபராதம் விதித்த நிலை​யில், கேரளா​வுக்கு பேருந்​துகளை இயக்க மாட்​டோம் என ஆம்னி பேருந்து உரிமை​யாளர் சங்​கம் அறி​வித்​துள்​ளது.

தமிழகத்​தைச் சேர்ந்த ஆம்னி பேருந்​துகள் முறை​யாக வரி செலுத்​த​வில்லை என்​றும் ஒரு​முறை கேரளா​வுக்கு செல்​வதற்​கான தற்​காலிக அனு​ம​தி​யைப் பெற்று பேருந்​துகள் இயக்​கப்​பட்​ட​தாகக் கூறி கொச்​சி​யில், 30 ஆம்னி பேருந்​துகளுக்கு தலா ரூ.2 லட்​சம் முதல் 2.5 லட்​சம் வரை மொத்​தம் ரூ.70 லட்​சம் வரை நேற்று முன்​தினம் அபராதம் விதிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் கேரளா​வுக்கு ஆம்னி பேருந்​துகளை இயக்க மாட்​டோம் என ஆம்னி பேருந்து உரிமை​யாளர்கள் அறி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​திலிருந்து கேரளா மாநிலத்​துக்கு நவ.7-ம் தேதி சென்ற 100-க்​கும் மேற்​பட்ட ஆம்னி பேருந்​துகளில், தமிழகத்​தைச் சேர்ந்த 30-க்​கும் மேற்​பட்ட ஆம்னி பேருந்​துகள் கேரள போக்​கு​வரத்து துறை​யின​ரால் திடீரென சிறைபிடிக்​கப்​பட்​டு, அந்​தப் பேருந்​துகளில் பயணம் செய்த பயணி​களை நடு​வழி​யிலேயே இறக்​கி​விடப்​பட்​டு, கடுமை​யான சிரமங்​களை எதிர்​கொண்​டுள்​ளனர்.

சிறைபிடிக்​கப்​பட்ட ஆம்னி பேருந்​துகளுக்கு கேரளா போக்​கு​வரத்​துத் துறை ரூ.70 லட்​சத்​துக்​கும் மேல் அபராதம் விதித்​துள்​ளது. இத்​தகைய நடவடிக்​கை, இரு மாநிலங்​களுக்கு இடையே​யான நீண்​ட​நாள் நல்​லுறவை​யும், பொதுப் போக்​கு​வரத்து ஒத்​துழைப்​பை​யும் பாதிக்​கும் வகை​யில் அமைந்​துள்​ளது. இதைத்​தொடர்ந்​து, நவ.7-ம் தேதி முதல் தமிழகத்​தில் இருந்து கேரள மாநிலத்​துக்கு இயக்​கப்​படும் 100-க்​கும் மேற்​பட்ட ஆம்னி பேருந்​துகளை இயக்​கு​வ​தில்லை என ஒரு​மன​தாக முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதனால் இரு மாநிலங்​களுக்கு இடையே​யான பொது போக்​கு​வரத்து பாதிப்​படை​யும். மேலும், தமிழகத்​திலிருந்து ஐயப்​பன் கோயிலுக்​குச் செல்​லும் தமிழக பயணி​களுக்​கும் பாதிப்பு ஏற்​படும். இந்த விஷ​யத்​தில் தமிழக அரசும் கேரளா அரசும் உடனடி​யாகத் தலை​யிட்​டு, இரு மாநிலங்​களுக்கு இடையே​யான பொதுப் போக்​கு​வரத்து பிரச்​சினைக்​குத் தீர்​வு​காண வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.