திருவனந்தபுரம்,
கேரளாவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ரெகுசந்திரபால் (வயது 75). இவர் 1991 முதல் 1995 வரையிலான கேரள காங்கிரஸ் அரசில் மாநில கலால் துறை மந்திரியாக செயல்பட்டுள்ளார். ரெகுசந்திரபால் அரசியல் மட்டுமின்றி, கவிதை எழுதுதல், நாடகம் எடுத்தல் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினார்.
இந்நிலையில், வயது முதிர்வு, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரெகுசந்திரபால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி ரெகுசந்திரபால் இன்று உயிரிழந்தார். ரெகுசந்திரபாலின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரெகுசந்திரபாலிற்கு மனைவி, 2 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.