பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் (முதல் போட்டி மழையால் ரத்து) தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். இரு வீரர்களும் இந்திய அணி 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது திடீரென மின்னலுடன் வானிலை மோசமடைந்தது. கனமழைக்கான அறிகுறி நிலவி வருகிறது. மைதானம் சுற்றியுள்ள பகுதியில் அதிக அளவில் மின்னல் அடித்தது. இதனால், மோசமான வானிலை மற்றும் வீரர்கள் பாதுகாப்பு கருதி ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.