ரவுடி நாகேந்திரன் உயிரோடுதான் இருக்கிறார்; பிளாஸ்டிக் சர்ஜரி செய்து போலீஸார் தப்பிக்க வைத்துவிட்டனர்: பகுஜன் சமாஜ் தலைவர் ஆனந்தன் தகவல் 

சென்னை: ‘ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் முதல் குற்​ற​வாளி​யாக கைதாகி சிகிச்​சை​யில் இருந்த ரவுடி நாகேந்​திரன் இன்​னும் இறக்​க​வில்​லை. ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை​யில் அவருக்கு பிளாஸ்​டிக் சர்​ஜரி செய்து போலீ​ஸார் தப்​பிக்க வைத்​து​விட்​டனர்’ என்று பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் தலை​வ​ரான வழக்​கறிஞர் ஆனந்​தன் சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் தெரிவித்​துள்​ளார்.

பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் தலை​வ​ராக இருந்த ஆம்​ஸ்ட்​ராங் கடந்த 2024 ஜூலை​யில் சென்​னை​யில் உள்ள அவரது வீட்​டின் அருகே ஒரு கும்​பலால் வெட்​டிப் படு​கொலை செய்​யப்​பட்​டார். ஏற்​கெனவே பல்​வேறு வழக்​கு​களில் கைதாகி சிறை​யில் இருந்த பிரபல ரவுடி​யான நாகேந்​திரன் இந்த கொலை வழக்​கில் முதல் குற்​ற​வாளி​யாக கைது செய்​யப்​பட்​டார். அவரது மகன்​கள் உட்பட மொத்​தம் 27 பேர் இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்கு விசா​ரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதி​மன்​றம் உத்தர​விட்​டுள்​ளது.

இந்தச் சூழலில், ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் கைதாகி, உடல்​நலக் குறைவு காரண​மாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சை​யில் இருந்த ரவுடி நாகேந்​திரன் கடந்த மாதம் உயி​ரிழந்​தார். இந்​நிலை​யில், இந்த வழக்​கில் நாகேந்​திரனின் மகன் அஸ்​வத்​தாமன் உள்​ளிட்ட 12 பேர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தனர். நீதிபதி எஸ்​.​கார்த்​தி​கேயன் முன்பு இந்த மனு மீதான விசா​ரணை நடந்​தது. அப்​போது, “இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்ளநிலை​யில், வழக்​கின் கோப்​பு​களை தமிழக காவல் துறை இன்​னும் சிபிஐ வசம் ஒப்​படைக்​க​வில்​லை. கடந்த ஒன்​றரை ஆண்​டு​களாக சிறை​யில் உள்ள எங்​களுக்கு ஜாமீன் வழங்க வேண்​டும்” என்று மனு​தா​ரர்​கள் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

அப்​போது, இந்த வழக்​கின் இடை​யீட்டு மனு​தா​ர​ரான ஆம்​ஸ்ட்​ராங்​கின் சகோ​தரர் கீனோஸ் தரப்​பில் வழக்​கறிஞரும், பகுஜன் சமாஜ் கட்​சி​யின் தற்​போதைய மாநிலத் தலை​வரு​மான பி.ஆனந்​தன் ஆஜரா​னார். அவர் கூறிய​தாவது: ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கை தமிழக போலீ​ஸார் முறை​யாக விசா​ரிக்​க​வில்லை என்​ப​தால்​தான் விசா​ரணை சிபிஐக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது. சமீபத்​தில் உயி​ரிழந்​த​தாக கூறப்​படும் இந்த வழக்​கின் முதல் குற்​ற​வாளி​யாக உள்ள நாகேந்​திரன் இன்​னும் இறக்​க​வில்​லை. அவருக்கு ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை​யில் பிளாஸ்​டிக் சர்​ஜரி செய்து போலீ​ஸார் அவரை தப்​பிக்க வைத்​துள்​ளனர்.

நாகேந்​திரனின் உரு​வத்​துக்​கும், இறந்​த​தாக தெரி​வித்து ஒப்​படைக்​கப்​பட்ட உடலுக்​கும் நிறைய வித்​தி​யாசம் உள்​ளது. இந்த வழக்​கில் பல்​வேறு மர்​மங்​கள் உள்​ளன. எனவே, இந்த சூழலில் மனு​தா​ரர்​கள் யாருக்​கும் ஜாமீன் வழங்​கக் கூடாது. இவ்​வாறு அவர் கூறி​னார். இதையடுத்​து, ஜாமீன் மனுக்​கள் மீதான உத்​தர​வை நவ.10-ம்​ தேதிக்​கு (நாளை) நீதிப​தி தள்ளி வைத்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.