59-வது பிறந்தநாளை முன்னிட்டு சீமான் வீட்டில் 3 ஆயிரம் பேருக்கு கறி விருந்து: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ​​நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானின் பிறந்​த​நாளையொட்​டி, சென்​னை​யில் உள்ள அவரது வீட்​டில் 3 ஆயிரம் பேருக்கு கறி விருந்து அளிக்​கப்​பட்​டது.

நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தனது 59-வது பிறந்​த​நாளை நேற்று கொண்​டாடி​னார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரி​விப்​ப​தற்​காக காலை முதலே சென்னை நீலாங்​கரை​யில் உள்ள அவரது வீட்​டில் ஏராள​மான தொண்​டர்​களும், கட்சி நிர்​வாகி​களும் குவிந்​தனர்.

சீமானுக்கு வாழ்த்​துக் கூற வருகை தந்த தொண்​டர்​களுக்​காக அவரது வீட்​டில் தடபுடலான கறி விருந்​துக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. அதன்​படி சுமார் 3 ஆயிரம் பேருக்கு விருந்து தயா​ரானது. இதையடுத்து நீலாங்​கரைக்கு வந்த தொண்​டர்​கள் வரிசை​யாக சீமானை சந்​தித்து சால்வை அணி​வித்​து, பூங்​கொத்து கொடுத்து பிறந்​த​நாள் வாழ்த்து தெரி​வித்தனர். மேலும் அவருடன் சேர்ந்து புகைப்​பட​மும் எடுத்​துக்​கொண்​டனர்.

பின்​னர் அவர்​களுக்​காக மீன் வறு​வல், நல்லி எழும்பு குழம்​பு, மட்​டன் சுக்​கா, சிக்​கன் பக்​கோடா என 13 வகை​யான அசைவ உணவு​களும், சாம்​பார்,
ரசம், வடை, பா​யாசம், பொறியலுடன் 9 வகை​யான சைவ உணவு​களும் பரி​மாறப்​பட்​டன. இதற்​கிடையே தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்,முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்செல்​வம், பாமக தலை​வர் அன்புமணி, விசிக தலை​வர் திருமாவளவன், மநீம தலை​வர் கமல்​ஹாசன், தமிழக பாஜக மூத்த தலை​வர்​கள் தமிழிசை, அண்​ணா​மலை, அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன், பாஜக நிர்​வாகி நடிகை கஸ்​தூரி உள்​ளிட்​டோரும்​ சீ​மானுக்​குசமூக வலை​தளங்​கள்​ ​வாயி​லாக ​வாழ்​த்​து தெரி​வித்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.