ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில் ரூ.2,203 கோடியில் 7 தொழிற்சாலைகள்: காணொலி மூலம் சந்திரபாபு நாயுடு அடிக்கல் 

அமராவதி: தனது சொந்த தொகு​தி​யான குப்​பத்​தில் ரூ.2,203 கோடி​யில் 7 தொழிற்​சாலைகளுக்கு நேற்று அமராவ​தி​யில் இருந்​த​படி​ காணொலி மூலம் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு அடிக்​கல் நாட்​டி​னார்.

ஆந்​திர மாநிலம் அமராவ​தி​யில் உள்ள தனது அலு​வல​கத்​தில் இருந்​த​படியே நேற்று முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு காணொலி மூலம் சித்​தூர் மாவட்​டம், குப்​பம் தொகு​தி​யில் ஒரே சமயத்​தில் 7 தொழிற்​சாலைகளுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

இந்த நிகழ்ச்​சி​யில் முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, குப்​பம் தொகுதி மக்​கள், தொழிற்​சாலை நிர்​வாகி​களிடம் பேசி​ய​தாவது: ஆந்​தி​ரா-தமிழகம்​-கர்​நாடக மாநிலங்​களின் எல்​லை​யில் குப்​பம் தொகுதி அமைந்​துள்​ளது. ஆதலால், இங்கு தொழிற்​சாலைகள் அமைப்​ப​தன் மூலம் 3 மாநிலங்​களுக்​கும் போக்​கு​வரத்து மிக சுலப​மாக மாறி​விடும். விரை​வில் குப்​பத்​தில் விமான நிலை​யம் வர உள்​ளது.

குப்​பம் ரயில் நிலை​ய​மும் விஸ்​தரிக்​கப்​பட்​டு, நவீனமய​மாக்​கப்​படும். இதன் மூலம் சாலை, ரயில், விமானங்​கள் மூலம் இங்கு தயாரிக்​கப்​படும் பொருட்​களை ஏற்​றுமதி செய்ய வசதி வாய்ப்​பு​கள் உண்​டாகும்.

24 ஆயிரம் பேருக்கு வேலை​: விரை​வில் குப்​பம் தொகு​தி​யில் ரூ.6,300 கோடி​யில் மேலும் 8 தொழிற்​சாலைகள் வர உள்​ளன. இப்​போது அடிக்​கல் நாட்​டப்​பட்​டுள்ள 7 தொழிற்​சாலைகளில் நேரடி​யாகவோ அல்​லது மறை​முக​மாகவோ 24 ஆயிரம் பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும். குப்​பத்​தில் மைக்ரோ வேளாண்​மையை தொடங்​கினேன்.

இப்​போது பல விவ​வா​யிகளின் பிள்​ளை​கள் வெளி​நாடு​களில் பணி​யாற்றி வரு​கின்​றனர். தகவல் தொழில்​நுட்​பம் படித்த பலர் தொழில​திபர்​களாக​வும் மாறி உள்​ளனர். வெளி​நாடு​களில் படித்து வேலை பார்ப்​போரில் 35 சதவீதம் பேர் தெலுங்​கர்​களே. இப்​போதே குப்​பத்​தில் மருத்​து​வம், பொறி​யியல், பாலிடெக்​னிக், திரா​விட பல்​கலைக்​கழகம் போன்​றவை உள்​ளன. இனி குப்​பம் ஒரு கல்வி மைய​மாக செயல்பட நடவடிக்​கைகள் எடுக்​கப்​படும். இங்​கிருந்து தரமான பழங்​கள் வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யப்​படு​கின்றன. வீடு​களுக்கே சென்று மருத்​துவ சிகிச்​சைகள் அளிக்​கப்​படு​கின்​றன. ஏஐ தொழில்​நுட்​பம் வருங்​காலத்​தில் மருத்​துவ ஆலோ​சக​ராக​வும் மாறும். இவ்​வாறு முதல்​வர்​ சந்​திர​பாபு நா​யுடு பேசி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.