கொலை, பலாத்கார, தீவிரவாத குற்றவாளிகள் பெங்களூரு சிறையில் சொகுசு வாழ்க்கை

பெங்களூரு: பெங்​களூரு மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள கொலை, பலாத்​கார, தீவிர​வாத குற்​ற​வாளி​கள் டிவி பார்த்​த​வாறு செல்​போனில் பேசுவது போன்ற வீடியோ ஆதா​ரங்​கள் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளன.

பெங்​களூருவை அடுத்​துள்ள பரப்பன அக்​ரஹா​ரா​வில் கடந்த 1997ம் ஆண்டு 138 ஏக்​கர் பரப்​பள​வில் மத்​திய சிறை கட்​டப்​பட்​டது. சொத்​துக்​கு​விப்பு வழக்​கில் தண்​டிக்​கப்​பட்ட தமிழக முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா, அவரது தோழி சசிகலா ஆகியோ​ரும் இந்த சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்​தனர். அப்​போது சசிகலா சீருடை அணி​யாமல் ஷாப்​பிங் சென்று வரு​வது போன்ற வீடியோ​வும், டிவி, தனி சமையலறை ஆகிய​வற்​றுடன் சொகு​சாக இருப்​பது போன்ற புகைப்​படங்​களும் வெளி​யானது குறிப்​பிடத்​தக்​கது.

கடந்த சில மாதங்​களுக்கு முன்பு கொலை வழக்​கில் கைதான கன்னட ந‌டிகர் தர்​ஷன் தனது நண்​பர்​களு​டன் செல்​போனில் பேசுவது போன்ற வீடியோ வெளி​யானது. அதே​போல பிரபல ரவுடிகள் அரி​வாளால் கேக் வெட்டி பிறந்​த​நாளை கொண்​டாடு​வது போன்ற வீடியோ​வும் வெளி​யானது.

தற்​போது சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள கொலை தண்​டனை கைதி உமேஷ் ரெட்டி 2 செல்​போன்​களை கையில் வைத்​துக்​கொண்டு பேசுவது போன்ற வீடியோ வெளி​யாகி​யுள்​ளது. 1997 – 2022 காலக்​கட்​டத்​தில் 20 பெண்​களை பலாத்​காரம் செய்​து, அதில் 18 பேரை கொலை செய்​த​தாக வழக்​கு​கள் இவர் மீது நிலு​வை​யில் உள்​ளன. இதில் ஒரு சில வழக்​கு​களில் ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்ட இவர், பரப்பன அக்​ரஹாரா சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.

அதே​போல 19 கிலோ தங்க கடத்​தல் வழக்​கில் கைதான தருண் ராஜ், தனது அறை​யில் சோஃ​பா​வில் அமர்ந்து டிவி பார்ப்​பது போன்ற புகைப்​படம் வெளி​யாகி​யுள்​ளது. இதுத​விர ஐஎஸ் தீவிர​வாத அமைப்​புக்கு ஆள் சேர்த்​த​தாக கைதான ஜுஹாப் ஹமீத் ஷக்​கீல் செல்​போனில் பேசுவது போன்ற வீடியோ வெளி​யாகி​யுள்​ளது.

இதுத​விர வேறு சில கொலை, கொள்​ளை, பலாத்​கார வழக்​கின் தண்​டனை கைதி​களும் செல்​போனில் பேசுவது போன்ற புகைப்​படங்​களும், சிகரெட் புகைப்​பது போன்ற புகைப்​படங்​களும் கன்னட ஊடகங்​களில் வெளி​யாகி சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளன. இதுகுறித்து விசாரித்து வருவதாக கர்​நாடக சிறைத்​துறை டிஜிபி தயானந்தா தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.