லீடர் பதவியில் அமர்த்தி ஒன்றரை வருடம் தான் ஆகிறது. ஆனாலும் டெல்லி தலைமைக்கு அவரைப் பற்றி ஏகப்பட்ட ‘பெட்டிஷன்கள்’ குவிகிறதாம். சூரியக் கட்சி தலைமையிடம் ‘ஓவரா’ பாசம் காட்டுகிறார் என்பது தான் அதில் பல பேரின் புகைச்சலாம். ‘ஸ்ட்ராங்கான’ கட்சித் தலைவர் கொலை வழக்கில் இவரையும் விசாரிக்கப் போகிறது ’மத்திய போலீஸ்’ என்றும் சிலர் கிலி அடிக்கிறார்களாம்.
இவரை லீடராக வைத்திருந்தால் சூரியக் கட்சி கூட்டணியை விட்டு நகர்த்தவே முடியாது என்று யோசிக்கும் ஜூனியர் எம்பி-க்கள் சிலர், “நம்மளோட தயவில்லாம சூரியக் கட்சி ஜொலிக்க முடியாது. அவங்களோட இருந்தாலும் நம்ம முழுமையா ஜெயிக்கிறதும் கஷ்டம். அதுக்குப் பேசாம, நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கிற பனையூர் பார்ட்டி லீடரோட டீல் போட்டு கூடுதலான இடங்கள்ல போட்டியிட்டு கெத்த காட்டலாமே” எனப் பேசி வருகிறார்களாம்.
இவர்கள் அனைவருமே லீடரை மாற்ற வேண்டும் என்பதை சிங்கிள் அஜென்டாவாக வைத்திருக்கிறார்களாம். ஒருவேளை இவர்கள் பேச்சைக் கேட்டு லீடர் மாற்றப்பட்டால், டெல்லிக்காரங்க சூரியக் கட்சிக்கு குட்பை சொல்ல முடிவெடுத்துட்டாங்கன்னு சூசகமா தெரிஞ்சுக்கலாம்னும் சொல்றாங்க.