ஜடேஜா மட்டுமில்லை! இந்த ஒரு அதிரடி வீரரையும் கேட்கும் RR! சிக்கலில் சிஎஸ்கே?

இந்தியன் பிரீமியர் லீக் 2026 ஆம் ஆண்டுக்கான பரபரப்பு இப்போதே தொடங்கியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே ஒரு பெரிய வீரர் பரிமாற்றம் குறித்த பேச்சு வார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோரை பரிமாறிக்கொள்ள இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நீண்ட நாட்களாக இது தொடர்பான செய்திகள் வெளியானாலும், இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

Sanju Samson to be traded for Ravindra Jadeja? 

Cricbuzz can confirm that Chennai Super Kings and Rajasthan Royals are seriously pursuing the trade. Over the last few days the trade deal has come into the realm of active negotiations #IPL2026 pic.twitter.com/bREGgpOTWZ

— Cricbuzz (@cricbuzz) November 9, 2025

பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலை

ஜடேஜா மற்றும் சாம்சன் இருவருக்கும் தலா 18 கோடி ரூபாய் மதிப்பு உள்ளது. மேலும் இந்த பரிமாற்றம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜடேஜாவை மட்டும் பரிமாற்றம் செய்வதற்கு பதிலாக, கூடுதலாக மற்றொரு வீரரையும் இந்த பரிமாற்றத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. இதுவே இந்த பேச்சு வார்த்தையில் ஒரு சிக்கலாக உருவெடுத்துள்ளது. 

ராஜஸ்தான் ராயல்ஸின் கோரிக்கை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி ஆட்டக்காரரான டிவால்ட் பிரவீஸையும் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பிரவீஸ் கடந்த சீசனில் பாதியில் சிஎஸ்கே அணியில் இணைந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிஎஸ்கே நிர்வாகம், ஜடேஜாவை பரிமாற்றம் செய்வதே ஒரு பெரிய முடிவு என்றும், பிரவீஸை விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

சிஎஸ்கேவின் நிலைப்பாடு

சிஎஸ்கே நிர்வாகம், இந்த பரிமாற்றம் குறித்து ஜடேஜாவிடம் ஆலோசனை நடத்திய பின்னரே பேச்சு வார்த்தையை தொடங்கியதாக கூறப்படுகிறது. மேலும், சிஎஸ்கே அணி அவர்களது X கணக்கில் ஜடேஜாவின் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அவர் அணியில் நீடிப்பார் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளது. இருப்பினும் சஞ்சு சாம்சனை அணிக்கு கொண்டு வருவதில் சிஎஸ்கே தீவிரமாக இருப்பதாகவும், கேப்டன் ருதுராஜ், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோரும் இந்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சிஎஸ்கேவை தவிர, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற அணிகளுடனும் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை ராஜஸ்தான் அணியுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், இஷான் கிஷன் அல்லது கேஎல் ராகுல் போன்ற வீரர்களை தங்கள் அணிக்கு கொண்டு வர சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் உலகில் ஒரு காலத்தில் பெரிதாக கருதப்பட்ட இந்த வீரர் பரிமாற்றம், தற்போது தீவிர முயற்சிகளில் உள்ளது. இந்த பரிமாற்றம் குறித்த இறுதி முடிவு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.