இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வரும் நவம்பர் 14ம் தேதி தொடங்கும் இந்த நீண்ட தொடர், கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நடைபெறுகிறது. இரு அணிகளும் அனைத்து வகையான போட்டிகளிலும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கும் என்பதால், விறுவிறுப்பான ஆட்டங்களுக்குப் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
Add Zee News as a Preferred Source
இந்தியா – தென் ஆப்பிரிக்கா போட்டி அட்டவணை
டெஸ்ட் தொடர்
1-வது டெஸ்ட் – நவம்பர் 14, 2025 – ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
2-வது டெஸ்ட் – நவம்பர் 22, 2025 – பர்சபரா ஸ்டேடியம், கவுகாத்தி
ஒருநாள் தொடர்
1-வது ஒருநாள் – நவம்பர் 30, 2025 – ஜே.எஸ்.சி.ஏ ஸ்டேடியம், ராஞ்சி
2-வது ஒருநாள் – டிசம்பர் 3, 2025 – ஷாஹீத் வீர் நாராயண் சிங் ஸ்டேடியம், ராய்ப்பூர்
3-வது ஒருநாள் – டிசம்பர் 6, 2025 – ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஸ்டேடியம், விசாகப்பட்டினம்
டி20 தொடர்
1-வது டி20 – டிசம்பர் 9, 2025 – பாராபதி ஸ்டேடியம், கட்டாக்
2-வது டி20 – டிசம்பர் 11, 2025 – மகாராஜா யாதவிந்திர சிங் ஸ்டேடியம், முல்லன்பூர்
3-வது டி20 – டிசம்பர் 14, 2025 – ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், தரம்சாலா
4-வது டி20 – டிசம்பர் 17, 2025 – பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா ஸ்டேடியம், லக்னோ
5-வது டி20 – டிசம்பர் 19, 2025 – நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத்
நேருக்கு நேர்
இதுவரை இரு அணிகளும் மோதிய போட்டிகளில், டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 18-16 என்ற கணக்கிலும், ஒருநாள் போட்டிகளில் 51-40 என்ற கணக்கிலும் முன்னிலையில் உள்ளது. இருப்பினும், டி20 போட்டிகளில் இந்திய அணி 18-12 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரடியாக காணலாம். மேலும், டிஜிட்டல் தளங்களான ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றிலும் போட்டிகளை நேரலையில் கண்டு ரசிக்கலாம். இந்த தொடருக்கான டெஸ்ட் அணிகள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய டெஸ்ட் அணி
சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணி
டெம்பா பவுமா (கேப்டன்), ஜுபைர் ஹம்சா, சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், டிவால்ட் ப்ரீவிஸ், டோனி டி சோர்ஸி, செனுரன் முத்துசாமி, கேசவ் மஹாராஜ், ஐடன் மார்க்ராம், வியான் முல்டர், ரியான் ரீகல்டன் (விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன் (விக்கெட் கீப்பர்).
About the Author
RK Spark