'திராவிட மாடல் ஆட்சி, விளையாட்டின் பொற்காலம்!' – உதயநிதி பெருமிதம்!

சர்வதேச ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைப் போட்டி சென்னையிலும் மதுரையிலும் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி முதல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உலகக்கோப்பைக்கான டிராபியை அறிமுகப்படுத்தி வைத்தார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, ‘திராவிட மாடல் அரசின் ஆட்சி காலம் தமிழக விளையாட்டுத்துறையின் பொற்காலம். நிறைய சர்வதேச தொடர்களை தமிழகத்தில் நடத்தியிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இப்போது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியை நடத்தவிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் ஹாக்கிக்கென ஒரு தனிப்பெருமை இருக்கிறது. நிறைய தமிழக வீரர்கள் இந்திய அணிக்காக ஆடியிருக்கிறார்கள். நாங்கள் ஆட்சியமைத்த சமயத்தில் தமிழகத்தில் 3000 ஹாக்கி வீரர்கள் மட்டுமே பயிற்சிக்காக பதிவு செய்திருந்தார்கள். இப்போது 11000 பதிவு செய்யப்பட்ட ஹாக்கி வீரர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த தொடரின் இலச்சினையாக ‘காங்கேயன்’ காளையை அறிவிக்கிறோம். உலகம் முழுக்கமிருந்து பலதரப்பு ரசிகர்களும் இந்தத் தொடரை காண சென்னைக்கும் மதுரைக்கும் வருவார்கள் என நம்புகிறோம்.’ என்றார்.

காங்கேயன் இலச்சினை
காங்கேயன் இலச்சினை

சர்வதேச ஹாக்கி சம்மேளன தலைவர் தயப் இக்ரம் பேசுகையில், ‘எனக்கும் தமிழ்நாட்டுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. சென்னை மதுரை போன்ற முக்கிய அழகிய நகரங்களில் இந்தத் தொடரை நடத்துவதில் மகிழ்ச்சி. ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை இங்கே சென்னையில்தான் சிறப்பாக நடத்தினோம். நாங்கள் சரியான போட்டி நடத்தும் இடத்தைத்தான் தேர்வு செய்திருக்கிறோம் என உறுதியாக நம்புகிறோம்.’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.