ம.பி. சரணாலயத்தில் சபாரி சென்ற ராகுல் காந்தி

போபால்: மத்​திய பிரதேசத்​தின் பச்​மரி நகரில் காங்​கிரஸ் நிர்​வாகி​களின் பயிற்சி முகாம் நேற்று நடை​பெற்​றது. இதில் அந்த கட்​சி​யின் மூத்த தலை​வர் ராகுல் காந்தி பங்​கேற்​றார். முன்​ன​தாக பச்​மரி சரணால​யத்தை அவர் பார்​வை​யிட்​டார். திறந்த ஜீப்​பில் சரணால​யம் முழு​வதும் சபாரி சென்றார்.

இதுகுறித்து பச்​மரி சரணாலய துணை இயக்​குநர் சஞ்​சீவ் சர்மா கூறும்​போது, “ராகுல் காந்தி பட்​டாம்​பூச்சி பூங்​கா​வில் சிறிது நேரம் தங்​கி​யிருந்​தார். ஜீப்​பில் சென்​ற​போது சில வகை மான்​களை அவர் பார்த்​தார். அவற்​றின் விவரங்​களை கேட்​டறிந்​தார். இங்​குள்ள பாறை ஓவி​யத்​தை​யும் அவர் கண்டு களித்​தார்’’ என்று தெரி​வித்​தார்.

இதன்​பிறகு நிருபர்​களுக்கு ராகுல் காந்தி பேட்​டியளித்​தார். அப்​போது அவர் கூறும்​போது, “ஹரி​யானா, மகா​ராஷ்டி​ரா, ம.பி, சத்​தீஸ்​கர் மாநிலங்​களி​லும் வாக்​கு​கள் திருடப்​பட்டுள்​ளன. வாக்கு திருட்டை மறைக்​கவே வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி மேற்​கொள்​ளப்​படு​கிறது’’ என்​று தெரி​வித்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.