ஹெலெனிக் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஜோகோவிச் சாம்பியன்

ஏதென்ஸ்,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றிருந்த ஹெலெனிக் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் (செர்பியா) – லோரென்சோ முசெட்டி (இத்தாலி) மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை ஜோகோவிச் கைப்பற்றினார். இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 4-6, 6-3 மற்றும் 7-5 என்ற செட் கணக்கில் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஜோகோவிச் வென்ற 101-வது பட்டம் இதுவாகும்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.