7-Seater கார்களே இன்னும் குடும்பங்களின் முதல் சாய்ஸ்; 10 Top Selling MPV-கள் இதோ

SUV-களோட போட்டி வேகமா நடக்குது… ஆனா இன்னும் குடும்பங்களின் மனசில தங்கியிருப்பது MPV-கள்தான்! ஒரே கார்ல முழு குடும்பம் சேர்ந்து சுலபமா, கம்ஃபர்ட்டா, சீராக பயணம் பண்ண முடியுதே அதுதான் இதோட பெருமை! இடம், மைலேஜ், வசதி – மூணுமே சரியாகச் சேர்ந்திருக்கும் கார்னு சொன்னா, பெரும்பாலோர் சொல்லுற பெயர் “Ertiga” அல்லது “Innova” தான். இப்போ Kia Carens, Maruti Invicto மாதிரி புதிய மாடல்களும் வரிசையில் நிக்குது.

அப்படி ஏப்ரல் முதல் செப்டம்பர் 2025 வரை இந்தியாவில் அதிகம் விற்கப்பட்ட Top 10 7-Seater MPV கள் இதோ!

10. மஹிந்திரா மராசோ – 252 கார்கள்

Mahindra Marazzo

மஹிந்திராவின் ஒரே MPV மாடல் தான் Marazzo.
2018-ல் அறிமுகமானது, ஆனா 2024-ல் டிஸ்கான்டின்யூ ஆயிடுச்சு.
டீசல் என்ஜின் ரிஃபைன்மென்ட், ரைடு கம்ஃபர்ட் நல்லா இருந்தாலும், விற்பனை சற்று மெதுவா போயிட்டது. BS6 Phase 2 அப்டேட் வந்தாலும் பெரிய மாற்றம் இல்ல. ஆனா சில ஸ்டாக் கிளியரன்ஸ் ஆஃபர்ஸ் காரணமா சிறிய “ரீ-பவுண்ட்”! இன்னும் சில நம்பிக்கையான கஸ்டமர்கள் இதைத் தேர்வு செய்றாங்க.

விலை: ₹14-16 லட்சம்

9. கியா கார்னிவல் – 425 கார்கள்

Kia Carnival

புதிய Carnival 2024-ல் வெளிவந்தது. இது ‘Luxury’ MPV பிரிவில் தன் மைல் கல் வைத்திருக்கும் மாடல். ADAS, டூயல் சன்ரூஃப், 8 ஏர்பேக், 12.3-இன்ச் டச் ஸ்க்ரீன் – எல்லாமே பக்கா கம்ப்ளீட் செட்டிங்! 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஸ்மூத்-ஆன பவர் டெலிவரி தருது. பெரிய குடும்பங்களுக்கும், கார்ப்பரேட் ட்ராவலுக்கும் இது ஒரு சாம்ராஜ்யம் மாதிரி காரு!

விலை: ₹75 லட்சம் (ஆன்-ரோடு, சென்னை).

8. டொயோட்டா வெல்ஃபயர் – 596 கார்கள்

Toyota Vellfire
Toyota Vellfire

“Luxury MPV”ன்னு சொன்னா முதல்ல நினைவுக்கு வர்றது Toyota Vellfire!
₹1 கோடியைத் தாண்டும் விலை இருந்தாலும், இதோட கம்ஃபர்ட், சைலன்ஸ், ரிஃபைன்மென்ட் – எல்லாம் க்ளாஸ்ஸுக்கு மேல். ஹைப்ரிட் டெக் உடன் நல்ல மைலேஜ் கிடைக்கும், ஆனா இதோட ஹைலைட் என்னன்னா “ரிலாக்ஸேஷன் சீட்ஸ்”! இரண்டாம் வரிசை பிசினஸ் கிளாஸ் போல் இருக்கும்.
பரிபூரண சொகுசு கார் டொயோட்டா வெல்ஃபயர். விலை: ₹1.5 – 1.6 கோடி

7. மாருதி சுசுகி இன்விக்டோ – 1,491 கார்கள்

Maruti Suzuki Invicto
Maruti Suzuki Invicto

Maruti-யின் NEXA லைன்அப்ல பெருமையாக நிற்கும் பிரீமியம் MPV தான் Invicto. Toyota Hycross-ன் சகோதரன் மாதிரி, இதுலவும் 2.0 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜின் தான். நிசப்தமான இன்டீரியர், ஸ்மூத் டிரைவ், ஹைப்ரிட் மைலேஜ் – இதுக்காகவே சிலந்தி வலைபோல கஸ்டமர்களை பிடிச்சிருக்கு! அதிகபட்சமாக Nexa கஸ்டமர்கள் இதை பிரீமியம் குடும்ப கார் என்று எடுத்துக்கொள்றாங்க. விலை: ₹31 – 36 லட்சம் (ஆன்-ரோடு, சென்னை).

6. டொயோட்டா ரூமியன் – 7,267 கார்கள்

Toyota Rumion

Ertiga அடிப்படையில் வந்தாலும், Toyota பேட்ஜ் சேர்ந்தவுடன் ரூமியனுக்கு நம்பிக்கை ரேஞ்ச் வேற லெவல்! பெட்ரோல், CNG இரண்டு ஆப்ஷன்களும் கிடைக்கும். எளிதா மெயின்ட்டெயின் பண்ணலாம், மைலேஜ் நல்லது, ப்ராக்டிக்கல் ஃபீல் – இதுதான் இதோட USP. விலை: ₹13 – 17 லட்சம் (ஆன்-ரோடு, சென்னை).

5. ரெனோ ட்ரைபர் – 10,677 கார்கள்

Renault Triber
Renault Triber

“குறைந்த விலையில் 7 சீட்டர்” – இதுக்கே மாதிரி உருவாக்கப்பட்ட கார்தான் Triber! 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் – மைலேஜ் நன்றாகவும், சிட்டி ட்ரைவுக்கு பரப்பரப்பா பொருந்தும். இன்டீரியர் மிகவும் ஸ்மார்ட், சீட் லேஅவுட் பல வேரியேஷன்களுடன் கிடைக்கும். முதல் முறை MPV வாங்குறவர்களுக்கு அல்லது சின்ன குடும்பங்களுக்கு இது சூப்பர் ஆப்ஷன். விலை: ₹6.9 – 10.19 லட்சம் (ஆன்-ரோடு, சென்னை).  

4. மாருதி சுசுகி XL6 – 16,947 கார்கள்

Maruti Suzuki XL6
Maruti Suzuki XL6

NEXA ஷோரூம்களில் விற்கப்படும் XL6 – ஒரு பிரீமியம் Ertiga-ன்னு சொல்லலாம்! 6 சீட்டர் லேஅவுட், மிடில் ரோவில் Captain Seats – இதுதான் இதோட மேஜர் ஹைலைட். LED ஹெட்லைட்ஸ், டூயல் டோன் லுக், ஆட்டோ கியர் டிரான்ஸ்மிஷன் – எல்லாமே க்ளாஸ்ஸா தெரியும். மைலேஜ் நல்லது, கம்ஃபர்ட் மிகச்சிறந்தது. நகர குடும்பங்களுக்கு பக்கா தேர்வு! விலை: ₹14.3 – 18.5 லட்சம் (ஆன்-ரோடு, சென்னை).

3. கியா காரன்ஸ் – 41,831 கார்கள்

Kia Carens
Kia Carens

இந்தியாவில் புதிய தலைமுறை குடும்பங்களுக்காக வந்த ஸ்மார்ட் MPV – Kia Carens! பிரீமியம் இன்டீரியர், பெட்ரோல்-டீசல்-CNG மூன்றும் கிடைக்கும். விருப்பம் எது வேண்டுமானாலும் தேர்வு பண்ணலாம். Captain Seats, Air Purifier, Sunroof, Connected Tech எல்லாமே ஆப்ஷனாக இருக்கு. மாடர்ன் லுக், கம்ஃபர்ட் இதுதான் இதோட வெற்றிக்கான காரணம். விலை: ₹13.80 – 16 லட்சம் (ஆன்-ரோடு, சென்னை).

2. டொயோட்டா இன்னோவா (Crysta & Hycross) – 53,589 கார்கள்

Toyota Innova Crysta
Toyota Innova Crysta
Toyota Innova Hycross

“Innova”ன்னு சொன்னாலே அது ஒரு நம்பிக்கையின் பெயர்!
2005-ல அறிமுகமானதிலிருந்து இந்திய குடும்பங்களின் ஹார்ட்‌பீட் கார்தான் இது. Crysta டீசல் இன்னும் டாக்சி மார்க்கெட்டில் கிங். Hycross ஹைப்ரிட் வெர்ஷன் பிரீமியம் லுக், நல்ல மைலேஜ், நவீன வசதி. பெரிய ஸ்பேஸ், ஸ்மூத் டிரைவ், பாதுகாப்பு இதுக்கு போட்டி இன்னும் யாரும் இல்லன்னு சொல்லலாம்! விலை: ₹22 – 39 லட்சம் (ஆன்-ரோடு, சென்னை).

1. மாருதி சுசுகி எர்டிகா – 93,235 கார்கள்

Maruti Suzuki Ertiga

7 சீட்டர் கார் வாங்குற ஒவ்வொரு 10 பேர்ல 4 பேரின் தேர்வு – Ertiga! 13 ஆண்டுகளாக மார்க்கெட்டில் இருந்தும் இன்னும் விற்பனை நம்பர் ஒன். 1.5 லிட்டர் பெட்ரோல் மைல்ட் ஹைப்ரிட் இன்ஜின் நல்ல மைலேஜ் தருது. CNG வெர்ஷனும் பரவலா ஹிட்டாகி இருக்கு. சிட்டி டிரைவ் எளிது, ஸ்பேஸ் போதுமானது, மெயிண்டனன்ஸ் குறைவு – அதனால டாக்சி மார்க்கெட்டிலும் டிமாண்ட்.

விலை: ₹10.60 – 16 லட்சம் (ஆன்-ரோடு, சென்னை).

பயண கம்ஃபர்ட், பெரிய ஸ்பேஸ் இதுக்காகவே Ertiga முதல் Vellfire வரை, எல்லா MPV-களும் தங்கள் சொந்த ரசிகர் வட்டத்தோட களமிறங்கியிருக்கு. உங்குளுக்கு பிடித்த MPV கார் எது?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.