Jason Sanjay:“அதனால்தான் காலத்திற்குள் படப்பிடிப்பு முடிப்பது சாத்தியமானது!" – ஜேசன் சஞ்சய்

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷனை கதாநாயகனாக வைத்து அவர் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு 95 சதவிகிதம் முடிந்துவிட்டதாம்.

அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டிருக்கிறார்கள். படத்திற்கு `சிக்மா’ எனத் தலைப்பிட்டு போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.

Jason Sanjay 1
Jason Sanjay 1

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தில் முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக சந்தீப் கிஷன் களமிறங்கியிருக்கிறாராம்.

லைகா நிறுவனத்துடன் இணைந்து ஜேசன் சஞ்சயும் இப்படத்தை தயாரிக்கிறார்.

இத்திரைப்படம் குறித்து இயக்குநர் ஜேசன் சஞ்சய், ” சமூகத்தால் முழுமையாக புரிந்து கொள்ளப்படாத ஒருவன் தன் இலக்குகளை நோக்கி நகரும் விஷயங்களை இந்தப் படம் பேசும்.

ஆக்‌ஷன், த்ரில்லர், காமெடி என இந்தப் படம் பரபரப்பான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும்.

தமனின் துடிப்பான இசையும் சந்தீப் கிஷனின் திறமையான நடிப்பும் லைகா புரொடக்‌ஷன்ஸின் பிரம்மாண்டமான தயாரிப்பும் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத படமாக மாற்றும்.

Jason Sanjay - Sundeep Kishan
Jason Sanjay – Sundeep Kishan

இவர்களின் திறமை மற்றும் ஆதரவால்தான் குறிப்பிட்ட காலத்திற்குள் படப்பிடிப்பு முடிப்பது சாத்தியமானது. ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது.

அது முடித்த பின்பு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கிவிடும்.” எனக் கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.