கவின் நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்கர்னன் இயக்கியுள்ள மாஸ்க் படத்தின் இசை வெளியீட்டு விழா நவ. 7 அன்று நடைபெற்றது.
வெற்றிமாறன் வழங்கும் இந்த படத்தை ஆண்ட்ரியா மற்றும் எஸ்.பி சொக்கலிங்கம் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் நடிகையாகவும் மிக முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றுளார் ஆண்ட்ரியா.
“ஜிவியின் ஃபன்னான ஆல்பம் இதுதான்” – Andrea

இசைவெளியீட்டு விழாவில் பேசிய ஆண்ட்ரியா, “நான் ஆடியோ லான்ச்சில் கலந்துகொண்டு ரொம்ப நாள் ஆகிட்டு. தமிழில் பெரிய ஸ்கிரீன் ரிலீஸ் இல்லை.
இந்த படம் கவினுக்கு அவரது கேரியரில் முக்கியமான திரைப்படம். ருஹானிக்கு தமிழில் அறிமுகப்படம், விக்கர்னனுக்கும் முதல் படம். சொக்கலிங்கம் சாருக்கு தயாரிப்பாளரா முதல்படம். உங்கள் ஆசியோடு இது பெரிய வெற்றிபெற வேண்டும்.
இது எதுவும் வெற்றிமாறன் சார் இல்லாமல் நடந்திருக்காது. அவர்தான் பெரிய மாஸ்டர் மாதிரி, நாங்கள் எல்லாம் அவருடைய பப்பெட்ஸ். எல்லாவற்றுக்கும் நன்றி சார்.

ஜிவி சொன்ன மாதிரி எங்களுக்கு நீண்டகால தொடர்பு இருக்கு. அவர் சமீபத்தில் பண்ணியதிலேயே ஃபன்னான ஆல்பம் இதுதான். இது யூத்தோட கனக்ட் ஆகும். நவம்பர் 21ம் தேதி வெளியாகுற படம் வெற்றிபெறணும்னு எல்லாருடைய ஆசியையும் வேண்டிக்கிறேன்” எனப் பேசினார்.