சென்னை ,
இந்தியா உள்பட 24 அணிகள் பங்கேற்கும் 14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டி வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடக்கிறது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த விழாவில் போட்டியின் சின்னமான ‘காங்கேயனை’ துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வெற்றிக்கோப்பையின் தமிழ்நாடு சுற்றுப்பயணத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவர் டத்தோ தயாப் இக்ரம், ஆக்கி இந்தியா செயலாளர் போலாநாத் சிங், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.