Fans Urge Urvil Patel To Replace Sanju Samson: 2026 ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக டிசம்பர் நடுப்பகுதியில் மினி ஏலம் இருப்பதால், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. சில முக்கிய வீரர்கள் அணி மாற இருப்பதால், ரசிகர்கள் இடையேயும் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனாக இருந்து வரும் சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து விலக விரும்புகிறார். இதனால் அவருக்காக பல அணிகள் போட்டிபோட்டு வருகின்றன. அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
Add Zee News as a Preferred Source
Urvil Patel vs Sanju Samson: உர்வில் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கலாமே?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜடேஜா, சாம் கரன் போன்ற முக்கிய ஆல்-ரவுண்டர்களை கேட்கும்போதும் கூட அந்த டீலுக்கு சிஎஸ்கே அணி தயாராக இருப்பதாக தெரிகிறது. நேற்று (நவம்பர் 11) சஞ்சு சாம்சனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமூக வலைத்தளம் மூலம் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்ததன் மூலம் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணி வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சிஎஸ்கே அணி ரசிகர்கள் சஞ்சு சாம்சன் வருவதால் சந்தோஷத்தில் இருந்தாலும் ஜடேஜா போன்ற சிஎஸ்கே பிராண்ட் வீரரை விட்டுக்கொடுத்துவிடுமோ என்ற பயத்திலும் உள்ளனர். அதே சமயம் சில ரசிகர்கள் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு எதற்கு என்ற கேள்வியையும் முன் வைத்து வருகின்றனர்.
Urvil Patel vs Sanju Samson: 28 பந்துகளில் சதம்
அவர்கள் அந்த கேள்வியை முன் வைப்பதில் முக்கிய காரணம் இருக்கிறது. அணியில் இருக்கும் உர்வில் பட்டேலை குறிப்பிட்டுதான் இந்த கேள்விகளை கேட்டு வருகின்றனர். அவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் ரஞ்சி போட்டியில் கூட உர்வில் 96 பந்துகளில் சதம் அடித்து கலக்கினார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்று வீரராக களமிறங்கிய அவர், 11 பந்துகளில் 31 ரன்களை குவித்த்தார். அதேபோல் சையது முஸ்தாக் அலி அறிமுக போட்டியில், 28 பந்துகளில் சதம் அடித்தார். தொடர்ந்து 36 பந்துகளில் 115 ரன்கள் அடித்து இரண்டாவது சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் 40 பந்துகளுக்குள் இரண்டு டி20 சதங்களைப் பதிவு செய்த முதல் பேட்ஸ்மேன் ஆனார்.
Urvil Patel vs Sanju Samson: சிஎஸ்கே அணிக்காக மூன்று போட்டிகள்
இதையெல்லாம் வைத்து ரசிகர்கள் உர்வில் பட்டேலுக்கு வாய்ப்பு அளிக்கலாமே என்றும் அதே சமயம் அவர் விக்கெட் கீப்பிங் செய்வதால் தோனிக்கு பின்னர் அவரை சிஎஸ்கே அணி பயன்படுத்தலாமே என கூறி வருகின்றனர். ஊர்வில் படேல் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக மூன்று ஐபிஎல் போட்டிகளில் விளையாடி மொத்தம் 68 ரன்கள் எடுத்தார். அந்த சீசனில் வான்ஷ் பேடிக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு மாற்றாக CSK அணியில் இணைந்தார். அவரது போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிராக 31 ரன்களும், குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு எதிரான போட்டியில் 37 ரன்களும் அடங்கும்.
About the Author
R Balaji