பெலெம்,
ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு (சி.ஓ.பி.30) பிரேசிலின் அமேசான் நகரமான பெலெம் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. மாநாட்டில் சுற்றுச்சூழல் சிந்தனைக் குழுவான ஜெர்மன்வாட்ச் காலநிலை ஆபத்து குறியீட்டை வெளியிட்டது.
இதில் உலகளவில், 1995-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 9,700 க்கும் மேற்பட்ட தீவிர இயற்கை பேரழிவுகளால் 8.3 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பேரிடர்களுடன் வெள்ளம், புயல், வறட்சி மற்றும் வெப்ப அலைகளால் பாதிப்புகள் அதிகளவில் இருந்துள்ளன. என்று தெரிவிக்க பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் காலநிலை பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. 430 இயற்கை பேரிடர்களில் சிக்கி 80 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1995 முதல் 2024-ம் ஆண்டு வரை நிகழ்ந்த இயற்கை பேரழிவுகளால் 130 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ.15,000 கோடி பொருளாதார சேதங்கள் ஏற்பட்டுள்ளன.1998-ம் ஆண்டு குஜராத் புயல், 1999-ம் ஆண்டு ஒடிசா சூப்பர் புயல், 2013-ம் ஆண்டு உத்தர காண்ட் வெள்ளபாதிப்பு உள்ளிட்டவை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளன.
2024-ம் ஆண்டில் குஜராத், மராட்டியம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இயற்கை பேரழிவுகளால் கடந்த 30 ஆண்டுகளில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் டொமினிகா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து மியான்மர், ஹோண்டுராஸ், லிபியா, ஹைட்டி, கிரெனடா, பிலிப்பைன்ஸ், நிகரகுவா. பஹாமாஸ் இந்தியா, ஆகியவை உள்ளன.