யுபிஎஸ்சி மெயின் தேர்வில் வெற்றிபெற்றவருக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: இந்த ஆண்டு சிவில் சர்​வீசஸ் மெயின் தேர்​வில் தேர்ச்சிபெற்ற தமிழக மாணவர்​களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்​கத்​தொகை பெற விண்​ணப்​பிக்​கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்​துள்​ளது.

இதுதொடர்​பாக தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகத்​தின் நான் முதல்​வன் (போட்​டித் தேர்​வு​கள் பிரிவு) சிறப்​புத் திட்ட இயக்​குநர் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு:

இந்த ஊக்​கத்​தொகை வழங்கும் திட்​டத்​தின்கீழ் ஆண்டு தோறும் 1000 மாணவர்களுக்​கு, முதல்​நிலை தேர்​வுக்கு தயா​ராகும் வகை​யில், 10 மாதங்களுக்​கு மாதம் ரூ.7,500-ம் முதல்​நிலை தேர்​வில் தேர்ச்சி பெற்​றவர்​களுக்கு ரூ.25,000-ம் ஊக்​கத்தொகை​யாக வழங்கப்​படு​கிறது. தற்​போது, யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில், நான் முதல்​வன் யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் முதன்​மைத் தேர்​வுக்​கான ஊக்கத் தொகை பெற்ற 659 பயனாளி​களில், 155 பேர் முதன்​மைத்​தேர்​வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்​களில் 87 பேர் இங்கு பயிற்சி பெற்​றவர்​கள்.

இதைத்​தொடர்ந்​து, முதன்​மைத் தேர்​வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்​களுக்கு நேர்​முகத்​தேர்​வுக்​கான பயிற்சி பெற ரூ.50,000 ஊக்​கத்​தொகை வழங்கப்​படும். இத்​தொகை​ மாணவர்​களின் வங்​கிக் கணக்​கில் செலுத்​தப்​படும். https://naanmudhalvan.tn.gov.in/ இணை​யதளம் மூலம் இன்​று முதல் நவ.24 வரை விண்​ணப்​பிக்​கலாம்.​

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.