எஸ்ஐஆர் படிவத்தில் சந்தேகங்கள் – அண்ணாமலை கூறுகிறார்

எஸ்​.ஐ.ஆர் படிவத்​தில் நிறைய சந்​தேகங்​கள் இருக்​கின்​றன. அவற்றை தேர்​தல் அதி​காரி​கள் தான் சரி செய்ய வேண்​டும் என்று பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை தெரி​வித்​துள்​ளார்.

கோவை​யில் நேற்று செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த அண்​ணா​மலை கூறிய​தாவது: நான் ரியல் எஸ்​டேட் தொழில் செய்​வ​தில் என்ன தவறு. என்​னுடைய வாழ்க்​கையை நான் வாழ்​கிறேன். நான் மண்​ணைச் சாப்​பிட முடி​யு​மா? நான் தொழில் செய்​கிறேன். நான் யாரை​யும் மிரட்டி பணம் பறிக்​க​வில்​லை. என்​னுடைய விவ​சாய தொழிலை நான் செய்​கிறேன். நான் அரசி​யலும் செய்​கிறேன்.

இதில் எதை நீங்​கள் தவறாக பார்க்​கிறீர்​கள்​… நான் எங்​கிருந்து சாப்​பிடு​வேன். எனது குழந்​தைகளுக்கு எப்​படி ஃபீஸ் கட்​டு​வேன்? எதைச் செய்ய வேண்​டு​மா​னாலும் நியாய​மான முறை​யில் செய்ய வேண்​டும் என்று நினைக்​கிறேன். என்னை எந்​தத் தொழிலும் செய்​யக்​கூ​டாது என்று கையை கட்​டிப்​போட்டு வைத்​தீர்​கள் என்​றால் நான் எதைச் சாப்​பிடு​வேன்​… என் காருக்கு எங்​கிருந்து டீசல் போடு​வேன்?

நான் எந்​தத் தொழிலும் செய்​யக்​கூ​டாது என்று சொல்​வதற்கு இங்கு யாருக்கு உரிமை இருக்​கிறது. இன்​னும் பல தொழில்​களை நான் ஆரம்​பிக்​கத்​தான் போகிறேன். எனக்கு நிறைய நேரம் இருக்​கிறது. என்​னால் பல விஷ​யங்​களைச் செய்ய முடி​யும். அரசி​யலும் செய்​வேன். 24 மணி நேர​மும் கையில் கடி​காரத்​தைக் கட்​டிக்​கொண்டு ஓடி வேலை செய்​கிறேன்.

நீங்​களும் அப்​படிச் செயல்​படுங்​கள்; சோம்​பேறி​யாக வீட்​டில் இருக்​காதீர்​கள். நீங்​களும் பல இடத்​திற்​குச் செல்​லுங்​கள். உங்​களது சொந்​தக் காசில் வாழுங்​கள். ரயி​லில் டிக்​கெட் எடுக்​காமல் வந்​தவர்​கள் எல்​லாம் இன்​றைக்கு ஏழு தலை​முறைக்கு சொத்​துச் சேர்த்து வைத்​துள்​ளனர். முதல்​வர் ஸ்டா​லின் இன்​றைக்கு என்ன தொழில் செய்​கி​றார். பணம் அவருக்கு எங்​கிருந்து வரு​கிறது? ஒரு பக்​கம் கஞ்சா புழக்​கம் அதி​கரித்​துள்​ளது. குற்​றம் செய்​தவர்​களே திரும்​ப​வும் குற்​றம் செய்​கின்​ற​னர். கோவை​யில் மாணவி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட இடம் 40 ஆண்​டு​களாக பிரச்​சினைக்​குரிய பாதை அது. அங்கு ஏன் போலீஸ் ரோந்து செல்​ல​வில்​லை. போலீ​சார் தங்​கள் தவறுகளை திருத்​திக்​கொள்ள வேண்​டும்.

வாக்​காளர் பட்​டியலில் உள்ள தவறுகளை சரி செய்​வதற்​காகத்​தான் சிறப்பு தீவிர வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி​கள் செய்​யப்​படு​கிறது. ஏற்​கென​வே, காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தி​லும் பல முறை எஸ்​ஐஆர் பணி நடந்​துள்​ளது. எஸ்​.ஐ.ஆர் படிவத்​தில் நிறைய சந்​தேகங்​கள் இருக்​கின்​றன. அவ்​வாறு சந்​தேகங்​கள் இருப்​பதை தேர்​தல் அதி​காரி​கள் தான் சரி செய்ய வேண்​டும்.

டெல்லி செங்​கோட்டை அருகே அப்​பாவி​கள் 13 பேர் உயி​ரிழந்​திருப்​பது மிக மோச​மான ஒரு பயங்​கர​வாத தாக்​குதல்​.​மும்​பை​யில் 2006-ல் நடந்​தது போல் டெல்​லி​யில் நடந்​துள்​ளது. இது மிக​வும் அபாயகர​மானது; ஆபத்​தானது. அரசி​யல் கட்​சிகளைக் கடந்து எல்​லோரும் ஒன்​றாக இணைந்து இதனைக் கண்​டிக்க வேண்​டும்.

நாட்​டிற்​குள் உற்​பத்​தி​யாகும் பயங்​கர​வாதி நமக்கு வேண்​டாம். பயங்​கர​வாதம் என்​பது மதத்தை தாண்​டியது. தமி​ழ​கத்தை பொறுத்​தவரை தீவிர​வாத தடுப்பு பிரிவு போலீ​ஸார் சிறப்​பாக செயல்​படு​கின்​ற​னர். ஆனாலும் கோவை, சேலம் பகு​தி​களில் ஐ.எஸ் ஆதர​வாளர்​கள் இருப்​பது தெரிய வந்​துள்​ளது. முதல்​வர் இதில் தனி கவனம் செலுத்த வேண்​டும். தனி கண்​காணிப்பு அதி​காரியை நியமிக்​க வேண்​டும். தமி​ழ​கத்​தில்​ ஆபத்​து அதி​கம். இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.