பிஹார் பெண்களின் ஞானமே என்டிஏ வெற்றிக்கு காரணம்: பாஜக மூத்த தலைவர் விளக்கம்

பாட்னா: பிஹார் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி வெற்றி குறித்து பாஜக​வின் தேசிய செய்​தித் தொடர்​பாளர் குரு பிர​காஷ் பாஸ்​வான் எழு​தி​யுள்ள கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: லாலு பிர​சாத் ஆட்​சிக் காலத்​தில் பிஹாரின் ஜெகா​னா​பாத்​தில் தின​மும் படு​கொலைகள் அரங்​கேறின. தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சிப் பொறுப்​பேற்ற பிறகு ஜெகா​னா​பாத் தற்​போது அமைதி பூங்​கா​வாக மாறி​யிருக்​கிறது. இங்கு கோகு தொகு​தி​யில் வாக்கு சேகரித்து கொண்​டிருந்​தோம். அப்​போது குந்​திதேவி பாஸ்​வான் என்ற மூதாட்டி எங்​களை வழிமறித்து நிறுத்​தி​னார்.

‘துப்​பாக்​கி​யால் சுட்டு கொன்​று​விடு​வோம் என்று மிரட்​டி​னால்​கூட பிரதமர் மோடிக்கு மட்​டுமே வாக்​களிப்​போம். அவர்​தான் எங்​களுக்கு ரேஷனில் இலவச​மாக உணவு தானி​யங்​களை வழங்​கு​கிறார். ஏழைகளுக்கு இலவச​மாக வீடு​களை கட்​டித் தரு​கிறார். அவருக்கு மட்​டுமே வாக்​களிப்​போம்’ என்று மூதாட்டி கூறி​னார். இவரை போன்ற பிஹார் பெண்​களின் ஞானமே, தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் வரலாற்று சிறப்​புமிக்க வெற்​றிக்கு மூல காரண​ம். இவ்​வாறு அவர் தெரி​வித்தார்​

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.