இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நேர அட்டவணையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ ஒரு அதிரடி மாற்றத்தை செய்துள்ளது. கௌஹாத்தியில் நிலவும் காலநிலை மற்றும் குறுகிய பகல் பொழுது காரணமாக, இந்த டெஸ்ட் போட்டி அரை மணி நேரம் முன்னதாக தொடங்கும் என்றும், வழக்கத்திற்கு மாறாக, மதிய உணவிற்கு முன்பாக தேநீர் இடைவேளை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Add Zee News as a Preferred Source
South Africa win the 1st Test by 30 runs.#TeamIndia will look to bounce back in the 2nd Test.
Scorecard https://t.co/okTBo3qxVH #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/21LHhUG5Rz
— BCCI (@BCCI) November 16, 2025
கௌஹாத்தியின் முதல் டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த போட்டியில் தென்னாபிரிக்கா அணி வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது போட்டி, வரும் நவம்பர் 22-ம் தேதி முதல் கௌஹாத்தியில் நடைபெறவுள்ளது. இதன் மூலம், கௌஹாத்தி நகரம் தனது முதல் டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில், மகளிர் ஒருநாள் உலக கோப்பையின் பல போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய அனுபவம், இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டிக்கு வழிவகுத்துள்ளது.
ஏன் இந்த நேர மாற்றம்?
வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமின் தலைநகரான கௌஹாத்தியில், குளிர்காலங்களில் சூரியன் மிக விரைவாக உதித்து, விரைவாகவே மறைந்துவிடும். இதனால், அங்கு பகல் பொழுது மிகவும் குறைவாகவே இருக்கும். வழக்கமான டெஸ்ட் போட்டி நேரமான காலை 9:30 மணிக்கு ஆட்டத்தை தொடங்கினால், மாலை 4 மணிக்குள்ளாகவே வெளிச்சம் குறைந்து, ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்படும்.
இதை கருத்தில் கொண்டு, பிசிசிஐ இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளரும், கௌஹாத்தியை சேர்ந்த வருமான தேவாஜித் சைகியா, “இது ஒரு நடைமுறைக்கு ஏற்ற முடிவு. வடகிழக்கு மாநிலங்களில் குளிர்காலத்தில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் மிக விரைவாக நடக்கும். மாலை 4 மணிக்கெல்லாம் வெளிச்சம் மங்கிவிடும். அதனால், ஆட்டத்தை அரை மணி நேரம் முன்னதாக, அதாவது காலை 9 மணிக்கே தொடங்க முடிவு செய்துள்ளோம்” என்று விளக்கமளித்துள்ளார்.
புதிய நேர அட்டவணை இதோ
டாஸ்: காலை 8:30 IST
முதல் செஷன்: காலை 9:00 – 11:00 IST
தேநீர் இடைவேளை: காலை 11:00 – 11:20 IST (20 நிமிடங்கள்)
இரண்டாவது செஷன்: காலை 11:20 – மதியம் 1:20 IST
மதிய உணவு இடைவேளை: மதியம் 1:20 – 2:00 IST (40 நிமிடங்கள்)
மூன்றாவது செஷன்: மதியம் 2:00 – மாலை 4:00 IST
பொதுவாக, பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே மதிய உணவிற்கு முன் தேநீர் இடைவேளை வழங்கப்படும். தற்போது, ஒரு பகல் டெஸ்ட் போட்டிக்கு இந்த முறை பின்பற்றப்படுவது இதுவே முதல் முறையாகும். மேலும், முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் கொல்கத்தாவில், டாஸ் போடுவதற்காக தங்கம் பூசப்பட்ட ஒரு சிறப்பு நாணயம் பயன்படுத்தப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
About the Author
RK Spark