Manoj Patel On Ravindra Jadeja Trade: 2026 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக அடுத்த மாதம் நடுப்பகுதியில் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இதற்க்காக அனைத்து அணிகளும் தயாராகி வந்த நிலையில், நேற்று (நவம்பர் 15) தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். வெங்கடேஷ் ஐயர், மதீஷா பதிரானா, லியாம் லிவிங்ஸ்டன், அண்ட்ரே ரஸ்ஸல் உள்ளிட்ட பல விலை உயர்ந்த வீரர்கள் கழட்டிவிடப்பட்டுள்ளனர். ரவீந்திர ஜடேஜா, சாம் கரண், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், சஞ்சு சாம்சன் போன்ற முக்கிய வீரர்கள் டிரேட் முறையில் பறிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Add Zee News as a Preferred Source
Ravindra Jadeja: ஆர்ஆர் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசிய ஜடேஜா
இதில் ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியால் கழட்டிவிடப்பட்டது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனுபவம் மற்றும் சிஎஸ்கே அணியின் பல வெற்றிகளுக்கு பக்கபலமாக இருந்த முக்கிய வீரரை ஏன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கழட்டிவிடுகிறது என்ற கேள்வியும் அதிருப்தியும் ரசிகர்கள் பலரின் மனதில் இருந்து வருகிறது. அதேபோல், ஜடேஜாவுக்கே இதில் விருப்பம் இல்லை என்று ஒருப்பக்கமும், அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வர ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் சில கோரிக்கைகளை வைப்பத்ததாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் மனோஜ் படேல் ரவீந்திர ஜடேஜா தனது அணிக்கு வருவது குறித்து பேசி இருப்பது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Ravindra Jadeja: ராஜஸ்தா ராயல்ஸ் அணி ஓனர் ஓபன் டாக்
ரவீந்திர ஜடேஜா ஒரு மாதத்திற்கு முன்பு அவரை தொடர்பு கொண்டு பேசியதாக மனோஜ் படேல் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ஜட்டு என்னை ஒரு மாதத்திற்கு முன்பு அதாவது அக்டோபர் நடுப்பகுதியில் தொடர்பு கொண்டார். அவர் தனது ஐபிஎல் கரியரை தொடங்கிய அணிக்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உற்சாகமாக பேசினார். கடந்த சில வாரங்களாக நாங்கள் பல முறை தொடர்பு கொண்டு பேசி உள்ளோம். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்புவதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்.
You’ve watched the trades unfold, now listen to our story. pic.twitter.com/8UdEVdboB4
— Rajasthan Royals (@rajasthanroyals) November 15, 2025
நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்: இது ஜடேஜாவுக்கு மட்டும் நடந்த வர்த்தகம் அல்ல. இது ஜடேஜா மற்றும் சாம் கரனுக்கு நடந்த வர்த்தகம். இருவரின் கலவையும், அடுத்த சீசனுக்குத் தேவையான மூன்று அல்லது நான்கு பாத்திரங்களை அவர்கள் எவ்வாறு கூட்டாக நிரப்புகிறார்கள் என்பதும்தான் அதை கவர்ச்சிகரமானதாக மாற்றியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Ravindra Jadeja: மீண்டும் RR அணியில் ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மூலம் 2008ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமானார். அவர் ஆர்ஆர் அணிக்காக 27 போட்டிகளில் விளையாடி 430 ரன்கள் எடுத்து 28.67 சராசரியில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஐபிஎல் தொடக்க சீசனில் அவர்கள் சாம்பியன்களாக மாறுவதில் முக்கிய பங்கு வகித்தார். அப்போதைய ஆர்ஆர் கேப்டனும் ஆஸ்திரேலிய ஜாம்பவானுமான ஷேன் வார்னால் அவரை ‘ராக் ஸ்டார்’ என்று அழைக்கப்பட்டார்.
2011 ஆம் ஆண்டு ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விட்டு வெளியேறி, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியுடன் ஒரு வருடம் விளையாடினார். அதன் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாடிய பிறகு மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்புகிறார். ரூ. 14 கோடிக்கு ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டிரேட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji