இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்கியது. கடந்த மூன்று நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது. மேலும் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியை வென்றுள்ளது தென்னாபிரிக்கா அணி. கேப்டன் பவுமா தலைமையில் இந்த ஒரு வரலாற்று சாதனையை தென் ஆப்பிரிக்க அணி பெற்றுள்ளது. பவுமாவின் தலைமையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி கோப்பையை வென்ற தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி, தற்போது இந்த சாதனையையும் செய்துள்ளது.
Add Zee News as a Preferred Source
South Africa win the 1st Test by 30 runs.#TeamIndia will look to bounce back in the 2nd Test.
Scorecard https://t.co/okTBo3qxVH #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/21LHhUG5Rz
— BCCI (@BCCI) November 16, 2025
இந்திய அணி தோல்வி
முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் பவுமா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் இன்னிங்சில் இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். வெறும் 159 ரன்களுக்கு தென்னாபிரிக்க அணி ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் தரப்பில் பும்ரா ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். மேலும் சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கடைகளை வீழ்த்தினர். இந்நிலையில் முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பாக இருந்தாலும் அடுத்தடுத்து விக்கெடுகளை இழந்து தடுமாறினர். மேலும் கேப்டன் சுப்மான் கில் கழுத்து வலியின் காரணமாக நான்கு ரண்களில் ரிட்டயர் ஹர்ட் ஆகி வெளியேறினார். இதுவும் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. முதலில் இந்திய அணி 189 ரன்கள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 30 ரன்கள் முன்னிலை பெற்றது.
கேப்டன் பவுமா பேட்டிங்
30 ரன்கள் பின்னிலையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெடுகளை இழந்தனர். ரவீந்திர ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சில் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டனர். இருப்பினும் கேப்டன் பவுமா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் அடித்தார். இந்த டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்த முதல் வீரரும் இவரே. இரண்டாவது இன்னிங்சில் தென்னாபிரிக்கா அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தாலும், பவுமாவின் அரை சதம் அவர்களுக்கு பெரிதும் உதவியது.
சொதப்பிய இந்திய அணியின் வீரர்கள்
வெறும் 124 ரன்கள் அடித்தால் வெற்றி என்று நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் அடுத்தடுத்து விக்கெடுகளை இழந்தனர். இதனால் இக்கட்டான நிலையில் இந்தியா மாறியது. அதன் பிறகு வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜூரில் சிறிது பார்ட்னர்ஷிப் கொடுத்தனர், இருப்பினும் அதுவும் கை கொடுக்கவில்லை. ஸ்பின்னர்களை மட்டும் வைத்தே இந்தியாவை தடுமாற செய்தது தென் ஆப்பிரிக்கா அணி. கடைசியில் அக்சர் படேல் அதிரடி காட்டினாலும் இந்திய அணி 93 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் இந்த தோல்வி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதை பாதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
About the Author
RK Spark