பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை சேகரிக்கும் கட்சி முகவர்கள் உறுதி அளிக்க வேண்டும்: அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தல் 

சென்னை: பூர்த்தி செய்த எஸ்​ஐஆர் படிவங்​களை சேகரிக்​கும் அரசி​யல் கட்​சிகளின் வாக்​குச்​சாவடி முகவர்​கள், அப்​படிவங்​கள் வாக்​காளர் பட்​டியலுடன் சரி​பார்க்​கப்​பட்​டது என உறு​தி​ மொழி அளிக்க வேண்​டும் என்று தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய தேர்​தல் ஆணைய உத்​தர​வின்​படி தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்த நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்றன. இதன் ஒருபகு​தி​யாக தமிழகத்​தில் உள்ள அனைத்து சட்​டப்​பேரவை தொகு​தி​களி​லும் பிஎல்​ஓ-க்​கள் எஸ்​ஐஆர் படிவங்​களை வாக்​காளர்​களுக்கு வழங்​கி, நிரப்​பப்​பட்ட படிவங்​களை மீண்​டும் பெற்று வரு​கின்​றனர்.

இப்​பணி​களை வெற்​றிகர​மாக மேற்​கொண்டு முடிக்க அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​சிகளின் வாக்​குச்​சாவடி நிலை முகவர்​களின் பங்​கானது இன்​றியமை​யாதது. அரசி​யல் கட்​சிகளின் முழு​மை​யான பங்​களிப்பை உறுதி செய்​யும் வகை​யில் இந்​திய தேர்​தல் ஆணை​யம் தனது கடந்த அக்​.27-ம் தேதி​யிட்ட கடிதத்​தில் தெரி​வித்​துள்ள வழி​காட்​டு​தல்​கள்​படி, அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிகளின் பிஎல்​ஏ-க்​கள், வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யீட்​டுக்கு முன்பு வரை நாள்​தோறும் அதி​கபட்​சம் 50 எண்​ணிக்​கையி​லான நிரப்​பப்​பட்ட எஸ்​ஐஆர் படிவங்​களை பெற்று வழங்க அனு​மதி அளித்து உள்​ளது.

தண்​டனைக்குரியது: அவ்​வாறு படிவங்​களை சமர்ப்​பிக்​கும்​போது பிஎல்​ஏக்​கள் “என்​னால் வழங்​கப்​படும் இந்த தகவல்​கள் அனைத்​தும் என் பாகத்​துக்கு உட்​பட்ட வாக்​காளர் பட்​டியல் உடன் சரி​பார்க்​கப்​பட்​டது என உறுதி அளிக்​கிறேன். தவறான தகவல்​கள் அளிப்​பது மக்​கள் பிர​தி​நித்​துவ சட்​டம் 1950, பிரிவு 31-ன் படி தண்​டனைக்கு உரியது என்​ப​தை​யும் நான் அறிவேன்” என்ற உறு​தி​மொழியை​யும் இணைத்து அலுவலர்கள் அளிக்க வேண்​டும்.

இவ்​வாறு பெறப்​படும் படிவங்​களை பிஎல்​ஓக்​கள் சரி​பார்த்து அவற்றை டிஜிட்​டல் வடிவ​மாக தொடர்​புடைய உதவி வாக்​காளர் பதிவு அலு​வலர் அல்​லது வாக்​காளர் பதிவு அலு​வலர்​களுக்கு சமர்ப்​பிப்​பார். வாக்​காளர் பதிவு அலு​வலர் அப்​படிவங்​கள் மீது ஆய்வு மேற்​கொண்டு உரிய நடவடிக்​கைகளை மேற்​கொள்​வார். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.