இந்தியாவின் தோல்விக்கு பணம்தான் காரணம்.. முன்னாள் வீரர் அதிர்ச்சி தகவல்!

Kevin Pietersen on India defeat: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி 14ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று (நவம்பர் 16) அப்போட்டியானது முடிவடைந்தது. தென்னாப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்றை மாற்றி எழுதியது. அதாவது 15 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியிடம் அவமான தோல்வியை சந்தித்துள்ளது.

Add Zee News as a Preferred Source

IND vs SA: பேட்டர்கள் சரியாக ஆடவில்லை 

இந்த மோசமான தோல்விக்கு பிட்ச் தான் காரணம் என கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் தெரிவித்திருந்தார். முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் நியூசிலாந்து அணியுடன் மோதி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கும் சுழற்பந்துக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்த பிட்ச்சுகளே காரணமாக கூறப்பட்டது. இந்திய அணியின் பேட்டர்கள் தொடர்ந்து சுழற்பந்து வீச்சுக்கு தடுமாறி வருகின்றனர். அவர்கள் அதற்கு எதிராக சிறப்பாக செயல்படாததே காரணம். 

நேற்றைய தினம் போட்டி முடிந்த பின்னர் தோல்விக்கு குறித்து கெளதம் கம்பீரிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர், இது போன்ற பிட்ச்சை அமைக்க வேண்டும் என கேட்டிருந்தோம். அதே சமயம் இந்திய அணியின் பேட்டர்கள் சரியாக ஆடவில்லை. அதுவே தோல்விக்கு முக்கிய காரணம் என தெரிவித்தார். இந்த நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு பிட்ச்சோ அல்லது அணியின் வீரர்களோ காரணம் இல்லை என முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். 

IND vs SA: பணம்தான் காரணம் -Kevin Pietersen

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளாவது, நான் சொல்வதை கேளுங்கள். கொல்கத்தா ஈடன் கார்டன் பிட்ச்சை பார்த்து ஸ்கோர் அடித்து முடிவை காண்பது பேட்டர்களின் நவீன டெக்னிக்கை மட்டுமே கீழே போடும். தற்போதைய இளம் வீரர்கள் சிக்ஸர்கள் மறும் ஸ்விட்ச் ஹிட் ஆகியவற்றை அடிக்கும் நோக்கத்தில் வளர்ந்துள்ளார்கள். அவர்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு இன்னிங்ஸை கட்டமைக்கும் நோக்கத்தில் வளரவில்லை. எனவே வீரர்களை குறை சொல்வது சரியானதாக இருக்காது. 

தற்போது கிரிக்கெட் என்பது, சுழலும் பந்துகளை எப்படி எதிர்கொள்வது அதற்கு எதிராக எப்படி தாக்குபிடிப்பது பற்றியது கிடையாது. மாறாக வெளிச்சமான விளக்குகள், சத்தமான இசை, கிரிக்கெட் வாரியங்களுகு கை நிறைய பணம், தனியார் பங்கு மற்றும் தனியார் உரிமை பற்றியது. 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.