புதுடெல்லி: டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஹரியானாவைச் சேர்ந்த அல் பலா பல்கலைக்கழகம் மீது மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தல் தொடர்பாக குற்றப்பிரிவு போலீஸார் ஏற்கெனவே இரண்டு எப்ஐஆர்களை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், தீவிரவாத தாக்குதலில் ஈடுபட முயன்ற மருத்துவர்களுக்கும், அப்பல்கலைக்கழகத்துக்கும் இடையேயான தொடர்பு குறித்து விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. இதன் காரணமாக டெல்லி போலீஸார் வேந்தர் ஜவாத் அகமதுக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேந்தரின் தம்பி கைது: இந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற மோசடி தொடர்பான வழக்கில் அல் பலா பல்கலைக்கழக வேந்தரின் தம்பி ஹமூத் அகமது சித்திக்கை ஹைதராபாத்தில் கைது செய்துள்ளதாக மத்திய பிரதேச போலீஸார் நேற்று தெரிவித்தனர்.