எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் நவ. 24-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் தகவல்

சென்னை: எஸ்​ஐஆர்-ஐ கண்​டித்து விசிக சார்​பில் வரும் 24-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என திரு​மாவளவன் தெரி​வித்​தார். சென்​னை அசோக் நகரில் உள்ள விடு​தலை சிறுத்​தைகள் கட்​சி​யின் தலைமை அலு​வல​கத்​தில் அக்​கட்சி தலை​வர் திரு​மாவளவன், அபு​தாபி​யில் நடை​பெற உள்ள குத்து சண்டை போட்​டி​யில் பங்​குபெற உள்ள இரண்டு வீராங்​க​னை​களுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வழங்​கிய பின் நிருபர்​களிடம் கூறிய​தாவது: பாஜக மற்​றும் தேர்​தல் ஆணை​யம் என இரண்டு நிறு​வனங்​களும் கூட்டு சேர்ந்து எஸ்​ஐஆர் திட்​டத்தை கொண்டு வந்து உள்​ளனர்.

தமிழகத்​தில் எஸ்​ஐஆர் பணி​களை கைவிட வேண்​டும் என விசிக தொடரந்து வலி​யுறுத்தி வரு​கிறது. அதற்கு காரணம், மிக குறுகிய காலம் மட்​டுமே உள்​ளது. குறுகிய காலத்​தில் வாக்​காளர்​கள் தங்​கள் பெயர்​களை சேர்ப்​பது சவாலாக உள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.