ஜகர்தா,
ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டில் பல்வேறு எரிமலைகள் உள்ளன. இதில் சில எரிமலைகள் அவ்வப்போது வெடித்து எரிமலை குழம்பை வெளியேற்றி வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் ஜாவா தீவில் உள்ள செமேரு எரிமலை இன்று வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து கரும்புகையுடன், லாவா எரிமலை குழம்பும் வெளியேறி வருகிறது.
இதன் காரணமாக செமேரு எரிமலை அருகே வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எரிமலை வெடிப்பால் ஜாவா தீவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
Related Tags :