கான்பெரா,
இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூகவலைதளங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கி கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன. எனவே 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்தது.
இந்த தடையானது வருகிற 10-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூகவலைதள கணக்குகளை நீக்க டிக்-டாக், எக்ஸ், மெட்டா ஆகிய நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதனை மீறினால் சுமார் ரூ.283 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால் சமூகவலைதள கணக்குகளில் இருந்து தங்களது தரவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள சிறுவர்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.