ஏ.ஆர்.ரஹ்மான் தொழிலதிபர் நிகில் காமத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.
அதில் ரசிகர்கள் செல்ஃபி கேட்பது தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், ” நான் அடிக்கடி எல்லாம் வெளியே செல்ல மாட்டேன். அப்படி நான் வெளியே செல்லும்போது ரசிகர்கள் செல்ஃபி எடுக்க வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராகத் தான் இருப்பேன்.

ஆனால் விமானங்களில் நீண்ட நேரம் பயணம் செய்து வரும் சமயத்தில் செல்ஃபி கேட்டால் மட்டும் சிரமமாக இருக்கும். இதுவும் ஒரு பார்ட் ஆஃப் தி கேம் தான்” என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து சென்னையில் இரவு உணவு சாப்பிட வெளியே செல்வீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், “இது என் வாழ்க்கையின் மிகப்பெரிய முரண். யாரும் சாப்பிட விடமாட்டார்கள்.
ஒரு திருமணத்திற்கு சென்றால் கூட எல்லோரும் வந்து என்னுடன் போட்டோ எடுத்துக்கொண்டிருப்பார்கள் அங்கும் யாரும் என்னை சாப்பிட விடமாட்டார்கள்.
அதனால் தற்போது நான் திருமணங்களில் சாப்பிடுவதே இல்லை. வாழ்த்துச் சொல்லிவிட்டு வந்துவிடுவேன். இது போன்ற சம்பவங்கள் ஹாலிவுட்டில் நடப்பதில்லை.
அங்குள்ள நட்சத்திரங்கள் ‘மன்னிக்கவும் நான் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாட்டேன்’ என்று ஓப்பனாக சொல்லிவிடுவார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் அப்படி சொல்வதில்லை. ஏனென்றால் அவர்கள் மிகவும் கனிவானவர்கள்” என்று கூறியிருக்கிறார்.