சென்னை: டாலர்சிட்டி என அழைக்கப்படும் திருப்பூர் மாநகரை குப்பை நகரமாக மாற்றிய திமுக அரசை கண்டித்து திருப்பூரில் 25-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். திருப்பூர் மாநகராட்சி முழுவதும் குப்பைகள் அள்ளப்படாமல் சுகாதார சீர்கேட்டால் அவதியுறும் நிலை, குடிநீர் பிரச்சனை, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்திய பிறகு சாலைகள் சீரமைக்கப்படாததால் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகள் என்று, செயல்படாமல் இருக்கும் திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் […]