
பாட்னா: பிஹார் மாநிலம் மதுபானி மாவட்டம், பெனிபட்டி கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்குர் (25).
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மைதிலிக்கு பாஜக வாய்ப்பளித்தது. அதன்படி, பிஹாரின் அலிநகர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் செல்வாக்குமிக்க பினோத் மிஸ்ரா போட்டியிட்டார்.