India Odi Captain Against South Africa Latest News: டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது இந்திய அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி 14ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி முடிவடைந்தது. இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று 1-0 என்ற கண்க்கில் முன்னிலை வகித்து வருகிறது.
Add Zee News as a Preferred Source
IND vs SA: டெஸ்ட் போட்டிக்கு அடுத்ததாக ஒருநாள் தொடர்
இந்த சூழலில், தற்போது கவுகாத்தி மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி நேற்று (நவம்பர் 22) தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் 300 ரன்களை தாண்டி இந்திய அணி பந்து வீச்சாளர்களுக்கு சவால் விடுத்து வருகின்றனர் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள். இப்போட்டி முடிவடைந்த பின்னர் இந்தியா – தென்னாப்பிரிக்கா இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது.
IND vs SA: சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்க வாய்ப்பில்லை
இப்போட்டிகள் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடருக்கான இந்திய அணி இன்று (நவம்பர் 23) ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், முதல் டெஸ்ட் போட்டியின்போது காயம் காரணமாக வெளியேறிய கேப்டன் சுப்மன் கில் தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை தவறவிட்டுள்ளார். அவர் தென்னாப்பிரிக்காவுடன் நடக்க இருக்கும் ஒருநாள் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என பேசப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒருநாள் அணியை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
IND vs SA: இந்திய அணியின் கேப்டன் யார்?
ஒருநாள் கிரிக்கெட்டின் துணை கேப்டனாக செயல்படும் ஷ்ரேயாஸ் ஐயரும் காயம் காரணமாக இல்லாததால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணியை வழிநடத்தி கொண்டு செல்லப்போவது யார்? ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஏற்கனவே கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் அவர்கள் மீண்டும் கேப்டன் பதவியை ஏற்க வாய்ப்பில்லை.
IND vs SA: கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா
இதன் காரணமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுலை கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கபடலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று (நவம்பர் 23) ஒருநாள் தொடருக்கான அணியை பிசிசிஐ அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதில் இந்திய அணியை வழிநடப்போவது யார் என்று அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.
About the Author
R Balaji