கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக, அந்த பகுதியில் உள்ள மின் கம்பி அறுந்து விழுந்ததில் வயதான தம்பதி உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். இது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரம் அருகே உள்ள சி.சாத்தமங்கலம் கிராமத்தில் காற்றுடன் கூடிய கனமழையின் காரணமாக தேவாலயம் முன்பு உட்கார்ந்திருந்தவர்கள், மீது உயரழுத்த மின்கம்பி மீது மரம் விழுந்ததால், மின்கம்பி அறுந்து […]