பீஜிங்,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று தொலைபேசியில் பேசிக் கொண்டனர். அவர்கள் வர்த்தகம், தைவான் மற்றும் உக்ரைன் விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.
சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா வெளியிட்ட அறிக்கையில், “தைவான் சீனாவுடன் இணைவது போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கின் ஒரு முக்கிய பகுதியாகும் என்று டிரம்பிடம் ஜின்பிங் தொலைபேசியில் கூறியதாக தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையும், இரு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியதாக அறிக்கை வெளியிட்டு உள்ளது.
‘சுய ராஜ்ஜிய தீவான, தைவானுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுத்தால்ஜப்பானின் ராணுவம் இதில் தலையிடும்’ என்று ஜப்பான் பிரதமர் சமீபத்தில் கூறியதை அடுத்து இந்த உரையாடல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.