ஜெருசலேம்,
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் சுற் றுப்பயணம் செய்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் தனது இந்திய பயணத்தை அவர் மீண்டும் ஒத்தி வைத்துள்ளார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்திய பயணம் பாதுகாப்புக் காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டில் ஏற்கனவே 2 முறை பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்திய பயணம் ரத்து செய்யப் பட்டது. தற்போது 3-வது முறையாக தள்ளி வைக்கப் பட்டுள்ளது. இஸ்ரேலில் நடந்த தேர்தல் காரணமாக கடந்த ஏப்ரல் மற்றும் செப்டம்பர் என 2 முறை அவரது இந்திய பயணம் ரத்தானது. கடைசியாக கடந்த 2018- ஆண்டு நெதன்யாகு இந்தியாவுக்கு வந்தார். இந்தநிலையில் அடுத்த ஆண்டு அவர் மீண்டும் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.