இந்தியா – தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்! எந்த சேனலில் ஒளிபரப்பாகிறது?

India vs South Africa ODIs: டெஸ்ட் தொடரைதொடர்ந்து, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதவுள்ளன. காயம் காரணமாக கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கே.எல். ராகுல் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். இந்த தொடருக்கான முழு அட்டவணை, மைதானங்கள் மற்றும் அணியின் விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது அனைவரின் கவனமும் ஒருநாள் தொடரின் பக்கம் திரும்பியுள்ளது. நவம்பர் 30-ம் தேதி தொடங்கும் இந்த தொடரில் மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

Add Zee News as a Preferred Source

 NEWS TeamIndia’s squad for @IDFCFIRSTBank ODI series against South Africa announced.

More details https://t.co/0ETGclxAdL#INDvSA pic.twitter.com/3cXnesNiQ5

— BCCI (@BCCI) November 23, 2025

போட்டி அட்டவணை மற்றும் மைதானங்கள்

முதல் ஒருநாள் போட்டி: நவம்பர் 30-ம் தேதி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ (JSCA) சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டி: டிசம்பர் 3-ம் தேதி, ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மூன்றாவது ஒருநாள் போட்டி: டிசம்பர் 6-ம் தேதி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ-விடிசிஏ (ACA-VDCA) மைதானத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும். இந்தியாவில் உள்ள ரசிகர்கள், இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரை JioHotstarல் பார்க்கலாம்.

இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்

முதல் டெஸ்ட் போட்டியில் கழுத்து வலி காரணமாக பாதிக்கப்பட்ட கேப்டன் சுப்மன் கில், இன்னும் முழுமையாக குணமடையாததால் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கில் இல்லாதது யஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. மற்ற வடிவங்களில் ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

பந்துவீச்சைப் பொறுத்தவரை, பணிச்சுமை மேலாண்மை காரணமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முகமது சிராஜும் இந்த தொடரில் இடம் பெறவில்லை. இதனால் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தங்கள் திறமையை நிரூபிக்க இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக, மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த தொடரில் விளையாடுவது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பிறகு இவர்கள் மீண்டும் ஒருநாள் ஜெர்சியில் களமிறங்குகிறார்கள். டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட சறுக்கலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அணிகள் விவரம்

இந்திய அணி: கே.எல். ராகுல் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல், ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

தென்னாப்பிரிக்க அணி: டெவால்ட் ப்ரீவிஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெம்பா பவுமா (சி), டோனி டி ஜோர்ஜி, ஐடன் மார்க்ரம், கார்பின் போஷ், மார்கோ ஜான்சன், குயின்டன் டி காக், ரூபின் ஹெர்மன், ரியான் ரிக்கல்டன், கேசவ் மகராஜ், லுங்கி என்கிடி, நந்த்ரே பர்கர், ஒட்டினல் பார்ட்மேன், ப்ரீனெலன் சுப்ரயன்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.