Will India Can Qualify WTC Final: 2025-2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிள் தொடங்கியதில் இருந்து இந்திய அணி தொடர்ந்து பல தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் சரிவை கண்டுள்ளது இந்திய அணி. நேற்று (நவம்பர் 26) முடிவடைந்த தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் வெயிட்வாஷ் ஆகி மோசமான சாதனையையும் படைத்துள்ளது.
Add Zee News as a Preferred Source
5வது இடத்திற்கு சரிந்த இந்திய அணி
நேற்றைய போட்டிக்கு பின்னர் புதிப்பிக்கப்பட்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில், இந்திய அணி 5வது இடத்திற்கு சரிந்து இருக்கிறது. வெற்றி சதவீதம் 50க்கும் கீழாக 48.15 என்ற அளவிற்கு சென்றிருக்கிறது. தற்போது உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கில் பாதி தூரத்தை கடந்திருக்கிறது. இந்த டெஸ்ட் சைக்கில் இந்திய அணிக்கு மொத்தம் 18 போட்டிகள் உள்ளன. அதில் தற்போது 9 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் 4 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
முதல் முதல் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா
இந்தியவை தவிர மற்ற அணிகள் இன்னும் பெரிதாக போட்டிகளில் விளையாடவில்லை. இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து அணி 6 போட்டிகளில் விளையாடி அதில் 2 போட்டிகளில் மட்டும் வென்று புள்ளிப்பட்டியலின் 6வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. புள்ளிப்பட்டியலின் முதல் இரண்டு இடங்களில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் உள்ளன. ஆஸ்திரேலியா அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 100 சதவீத வெற்றியுடன் முதல் இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி விளையாடிய நான்கில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 75 சதவீத வெற்றியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்திய அணியால் இறுதி போட்டிக்கு செல்ல முடியுமா?
கடந்த இரண்டு டெஸ்ட் சைக்கில் வைத்து பார்க்கையில் 60 முதல் 65 சதவீதம் வெற்றி வைத்திருக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு சென்றுள்ளது. இந்திய அணி 60 வெற்றி சதவீதத்தை எட்ட வேண்டும் என்றால் 130 புள்ளிகளை பெற வேண்டும். 130 புள்ளிகள் பெற இந்திய் ஆணிக்கு இன்னும் 78 புள்ளிகள் தேவை. இன்னும் 9 போட்டிகள் எஞ்சி உள்ளன. நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுடன் தலா 2 போட்டிகளும் ஆஸ்திரேலியா அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளும் உள்ளது.
காத்திருக்கும் சவால்கள்
இதில் இந்திய அணி 7 போட்டிகளில் வெற்றி மற்றும் இரண்டு போட்டிகளில் டிரா கண்டால் மட்டுமே முதல் இரண்டு இடத்தை பிடிக்க வாய்ப்பிருக்கிறது. இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்திவிடும் என்று வைத்துக்கொள்ளலாம், ஆனால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை வீழ்த்துவது என்பது இந்தியா தற்போது இருக்கும் ஃபார்மை வைத்து பார்க்கையில் கடினமானதாக தெரிகிறது. இதன் காரணமாக இந்திய அணி தற்போது இருப்பதைவிட பல மடங்கு தயாராக வேண்டும். நல்ல பேட்டிங் மற்றும் தரமான பந்துவீச்சு மூலமே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிளை வீழ்த்த முடியும். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இந்திய அணிக்கு வரும் போட்டிகள் மிகவும் சவாலாக இருக்கும் என்பது சந்தேகம் இல்லை.
About the Author
R Balaji