சென்னை: டிட்வா புயலால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அரை நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகளும் ஏற்றப்பட்டுள்ளன. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் இலங்கை அருகே மையம் […]