ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் அதிக விலை போக வாய்ப்புள்ள 5 வெளிநாட்டு வீரர்கள் யார்? -விவரம்

IPL Mini Auction 2026 News: வரவிருக்கும் ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களுக்கான 31 இடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், அதிக விலைக்கு ஏலம் போக வாய்ப்புள்ள ஐந்து முக்கிய வீரர்கள் பற்றி பாப்போம்.

Add Zee News as a Preferred Source

1. லியாம் லிவிங்ஸ்டோன் (Liam Livingstone)

ஆங்கிலேய ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன் டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் பெரும் தொகைக்கு ஏலம் போவார் என்பதில் சந்தேகம் இல்லை. இவர் சமீப காலமாக நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், தனது அதிரடி பவர் ஹிட்டிங் (power hitting) மூலம் ஒரு கணத்தில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறனுக்காகப் புகழ்பெற்றவர். இதனால் இவர் அனைத்து அணிகளின் விருப்பப் பட்டியலிலும் நீடிப்பார்.

2. மைக்கேல் பிரேஸ்வெல் (Michael Bracewell)

இந்த பட்டியலில் எதிர்பார்க்கப்படாத ஒரு பெயர் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல். இவர் கீழ் வரிசையில் மிகவும் பயனுள்ள வீரராகவும், இந்த டி-20 ஃபார்மட்டில் சிறந்தவராகவும் உள்ளார். பிரேஸ்வெல் பல அணிகளுக்குச் சரியான பொருத்தமாக இருக்க முடியும். எனவே, ஏல மேசையில் இவரை அணிகள் விரட்டிச் செல்ல வாய்ப்புள்ளது.

3. மதீஷா பத்திரனா (Matheesha Pathirana)

லசித் மலிங்காவின் ஓய்வுக்குப் பிறகு, ஜஸ்பிரித் பும்ராவைப் போலச் சரியான யார்க்கர்களை (Yorkers) வீசும் ஒரே வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா தான். இது அவரை அனைத்து அணிகளுக்கும் ஒரு ஹாட் பிக்காக மாற்றுகிறது. இவரது முன்னாள் ஐபிஎல் அணியான சிஎஸ்கே, ஏலத்தில் இவரை மீண்டும் எடுக்க முயற்சிக்கும் வாய்ப்புள்ளது.

4. ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் (Jake Fraser-McGurk)

ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், மினி ஏலத்தில் அதிக விலை போகக்கூடியவர்களில் ஒரு சர்ப்ரைஸ் வீரராக இருக்கலாம். ஏற்கனவே தனது திறமையை நிரூபித்துள்ள ஜேக், தங்கள் அணியில் ஒரு வெளிநாட்டு தொடக்க ஆட்டக்காரரைச் சேர்க்க விரும்பும் பல அணிகளின் கவனத்தை ஈர்ப்பார்.

5. கேமரூன் கிரீன் (Cameron Green)

வரவிருக்கும் ஏலத்தில் அதிகப் பலன் அடையக்கூடிய வீரராக ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் எதிர் பார்க்கப்படுகிறார். இவரது பவர் ஹிட்டிங், பந்துவீச்சு, சுறுசுறுப்பு என அனைத்து அம்சங்களிலும் இவர் சிறந்து விளங்குவதால், இந்தமுறை கிரீன், ஐபிஎல் ஏல சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. அதிகப் பணம் வைத்திருக்கும் இரண்டு அணிகளான கேகேஆர் மற்றும் சிஎஸ்கே ஆகியவை இவரது சேவையைப் பெற முயற்சிக்கும் வாய்ப்புள்ளது.

ஐபிஎல் 2026 மினி ஏலம் விவரம் மற்றும் தகவல்:
ஏலத் தேதி (Date): டிசம்பர் 16, 2025
இடம் (Venue): எதிஹாட் அரினா (Etihad Arena), அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம் (UAE)
நேரம் (Time): இந்திய நேரப்படி (IST) பிற்பகல் 3:00 மணிக்கு தொடங்கும்.

இந்த ஏலம் வெளிநாட்டில் நடத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும் (முன்னதாக 2024-ல் துபாயிலும், 2025-ல் சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலும் நடைபெற்றது).

ஐபிஎல் 2026 மினி  ஏலத்தில் நிரப்பப்பட இடங்கள் விவரம்:

மொத்த வீரர்கள்: 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

நிரப்பப்பட வேண்டிய இடங்கள்: 77 (இதில் 31 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கானது).

ஐபிஎல் 2026 அணிகளின் மீதமுள்ள தொகை (Purse) விவரங்கள்:

அதிகபட்ச தொகை உள்ள அணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) – ₹64.30 கோடி.

அதிகம் தொகை உள்ள அடுத்த அணி: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) – ₹43.40 கோடி

About the Author


Shiva Murugesan

Shiva Murugesan

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.